Connect with us

Cinemapettai

திரும்பி வந்தவுடன் இருக்கிறது பேசின எல்லார்க்கும்.. சிம்பு எடுத்த சபதம்

simbu-latest-news

Tamil Cinema News | சினிமா செய்திகள்

திரும்பி வந்தவுடன் இருக்கிறது பேசின எல்லார்க்கும்.. சிம்பு எடுத்த சபதம்

நடிகர் சிம்புவுக்கு முன்னணி நடிகர்களை போல் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம் உண்டு. சிம்பு பட வெளியீட்டின்போது தமிழகமெங்கும் உற்சாக வரவேற்பு இருக்கும். ஆனால் அங்குதான் ஒரு சிக்கல். படம் ரிலீஸான தானே உற்சாகம் இருக்கும் என்கிறது ரசிகர்கள் தரப்பு.

வாலு பட பிரச்சனையின் போது கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் பிரச்சனை நீண்டு கொண்டே சென்றது. இவரும் தனக்கு என்ன என்று அவர் பாட்டுக்கு வெறும் சாப்பாடு சாப்பிட்டு உடம்பை ஏற்றி விட்டார். இடையில் தலைவருக்கு காதல் சோகம் வேறு (எந்த காதல் சோகம் என்று கேட்க வேண்டாம்). அதில் சிம்பு ஆண்ட்ரியா கிசு கிசு வேறு வந்தது.

திடீரென்று யாரும் எதிர்பாராத வகையில் அவரது அப்பாவே படத்தை வாங்கி வெளியிட்டு வந்தார். இதனால் செய்வதறியாது திகைத்த சிம்பு மீண்டும் படப்பிடிப்புக்கு செல்ல வேண்டியதாயிற்று. அங்கே போய் வழக்கம்போல் தயாரிப்பாளர்களிடம் வம்பு வைத்துள்ளார்.

கௌதம் மேனன், வெங்கட்பிரபு போன்றோர் இவருடன் பணியாற்ற விருப்பமாக இருந்தும் சிம்பு தனது சோம்பேறித்தனத்தால் நல்ல பட வாய்ப்புகள் எல்லாம் இழந்து வந்தா ராஜாவாகத்தான் வருவேன் என்ற மாபெரும் சகாப்தத்தில் நடித்தார். அந்த படத்தின் ரிசல்ட் நான் சொல்லித் தெரியப் போவதில்லை. சிம்பு நடித்த ரீமேக் படங்கள் பெரிதாக வெற்றி பெறவில்லை.

தற்போது மாநாடு படத்தில் நடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டவுடன் உடனடியாக சபரிமலைக்கு மாலை போட்டு சூட்டிங்க்கு டிமிக்கி கொடுத்து விட்டார். தயாரிப்பு தரப்பு இதற்கு மேல் அவரிடம் கெஞ்ச முடியாது என கைவிட்டுவிட்டது.

என்னதான் நல்ல கலைஞனாக இருந்தாலும் நல்ல குணாதிசயங்களே நல்ல மனிதர்களை வளர்ச்சி பெற்றுத் தரும் என்பது நிதர்சனமான உண்மை. இப்பொழுது சபரிமலைக்கு மாலை போட்டுசென்றுள்ளார். மேலும் இனி வரபோகும் படங்கள் பதில் சொல்லும் என சபதம் எடுத்துள்ளாராம். மாலை போட்டு திரும்பி வந்தவுடன் இருக்கிறது பேசின எல்லாருக்கும் என்று கூறுகிறார்கள் அவரது தீவிர ரசிகர்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top