Connect with us
Cinemapettai

Cinemapettai

suriya-six-pack

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சிக்ஸ் பேக்கில் சூர்யாவை ஓரம் கட்டிய விஷ்ணு விஷால்.. கம்பீரமாக இணையத்தை மிரள வைத்த புகைப்படம்!

சினிமாத்துறையில் நடிகைகள் தங்களுடைய அழகை மெயின்டெய்ன் செய்வது போல், பல நடிகர்களும் தங்களது உடல் அழகை உடற்பயிற்சி செய்து கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்கின்றனர்.

ஏனெனில் கட்டுக்கோப்பான உடல் இருந்தால்தான் படவாய்ப்புகள்  மட்டுமில்லாமல் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகவும் முடியும்.

அந்த வகையில் தான் நடிகர் ஆர்யா, தனுஷ், சிம்பு உள்ளிட்ட பலர் சிக்ஸ் பேக்ஸ் வைத்துள்ளனர்.

இந்த நிலையில் தமிழ் சினிமாவின் இளம் நடிகரான விஷ்ணு விஷால் சிக்ஸ் பேக்ஸ் உடற்கட்டுடன் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது தமிழ் திரையுலகில் ‘வெண்ணிலா கபடி குழு’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் தான் விஷ்ணு விஷால்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘ராட்சசன்’ படம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவு பேசப்பட்டது.

தற்போது விஷ்ணு தன்னுடைய உடற்பயிற்சிக் கூடத்தில் கண்ணாடி முன் நின்று தன்னுடைய சிக்ஸ்பேக்சை காட்டி கம்பீரமாக எடுத்துக் கொண்டுள்ள புகைப்படம் இணையத்தை மிரள விட்டுள்ளது.

Vishnu-Vishal

Vishnu-Vishal

மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகைகள் பலர் விஷ்ணு விஷாலை பார்த்து ஜொள்ளு விட்டு திரிகின்றனர்.

Continue Reading
To Top