சூர்யா 36

தொடர்ந்து சிங்கம், சிங்கம் 2, சி3 என்று போலீஸ் வேடத்தில் நடித்து வந்த சூர்யா வழக்கத்திற்கு மாறாக தானா சேர்ந்த கூட்டம் படத்தில் வித்தியாசமான கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

suriya 36 flp & title

இப்படத்தைத் தொடர்ந்து முதல் முறையாக செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா தன்னுடைய 36வது படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இப்படத்தின் பெயர், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியாக இருக்கிறது. அது என்னவாக இருக்கும் என்று சூர்யா ரசிகர்கள் ஆர்வமாக உள்ள நிலையில், சூர்யாவின் இந்த போட்டோ ட்விட்டரில் வைரலாகி வருகின்றது.

suriya 36

விஜய் 62

thalapathy 62

தளபதி விஜய் மெர்சல் படத்தை தொடர்ந்து முருகதாஸ் படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் படபிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது, படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். மேலும் முதல் கட்ட படபிடிப்பு சென்னையில் நடைபெற்றது, அடுத்த கட்ட படபிடிப்பு கொல்கத்தாவில் நடைபெற்றது தற்பொழுது மீண்டும் படபிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.

இரண்டு தினங்களுக்கு முன் சன் டிவியின் ஸ்டுடியோவில் ஷூட்டிங் நடை பெற்றது. அதை பற்றிய தகவல்களை பிரபல வீடியோ ஜாக்கிகல் பலர் அப்டேட் செய்தனர்.

vijay 62

அதனை தொடர்ந்து நேற்று சென்னையில் அரசு பள்ளயில் ஷூட்டிங் நடந்துள்ளது. இந்த போட்டோவும் வைரலாக பரவிவருகிறது.

vijay 62