Connect with us

Cinemapettai

கெத்தான லுக்கில் டிடி வெளியிட்டுள்ள புகைப்படம்! இவங்களுக்கு மட்டும் வயசு கூடுதா இல்லையானே தெரியல!

dd

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கெத்தான லுக்கில் டிடி வெளியிட்டுள்ள புகைப்படம்! இவங்களுக்கு மட்டும் வயசு கூடுதா இல்லையானே தெரியல!

விஜய் டிவியின் சொத்து என்று கூறப்படும் அளவிற்கு அந்த சேனல் உடன் தொடர்புடையவர் தான் திவ்யதர்ஷினி. இவர் தொகுப்பாளினியாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்திருக்கிறார்.

மேலும் தொகுப்பாளராக வேண்டும் என்ற கனவு கொண்ட ஒவ்வொருவருக்கும் சிறந்த எடுத்துக்காட்டாய் திகழ்ந்து வருகிறார் திவ்யதர்ஷினி.

அதேபோல், திவ்யதர்ஷினி 2003ஆம் ஆண்டு வெளிவந்த ‘நளதமயந்தி’ என்ற படத்தின் மூலம் சினிமாவில் கால் பதித்தார். அத்தோடு சர்வம் தாளமயம், சரோஜா, கோவா, பவர் பாண்டி போன்ற படங்களில் சிறு வேடங்களில் நடித்துள்ளார். மேலும் திவ்யதர்ஷினி கௌதம் மேனன் இயக்கத்தில் உருகவாகும் ‘துருவ நட்சத்திரம்’  படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறாராம்.

இந்த நிலையில் டிடி தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தை மிரள விட்டுள்ளது.

அதாவது தற்போதெல்லாம் சோசியல் மீடியாக்களில் புகைப்படங்களை பதிவிடுவது வழக்கமாகிவிட்டது. அதுபோல், டிடி அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்களின் வரவேற்பு குவியும்.

Divyadharshini

Divyadharshini

அந்த வகையில் தற்போது டிடி செம ஸ்டைலாக காருக்குள் அமர்ந்து கிளாஸ் ஆக போஸ் கொடுத்திருக்கும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். இந்த புகைப்படம் இணையத்தில் காட்டு தீ போல் பரவி வருகிறது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top