கின்னஸ் சாதனை பாடகி லதா மங்கேஷ்கர் மரணம்.. காரணம் கேட்டு அதிர்ந்துப்போன திரையுலகம்!

இந்தியாவின் பிரபல பின்னணி பாடகியாக கருதப்படும் லதா மங்கேஷ்கர் மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் கொரோனா தொற்று காரணமாக கடந்த மாதம் 11ம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

இருந்தாலும் அவரது உடல் நிலை தேறி விரைவில் குணமாவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீரென நேற்று மீண்டும் அவரது உடல்நிலை மோசமடைந்தது. டாக்டர்கள் தீவிர சிகிச்சையளித்து அவரது உயிரை காப்பாற்ற முயன்றனர். இருந்தும் சிகிச்சை பலன் இல்லாமல் இன்று காலையில் உயிரிழந்தார் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கிட்டத்தட்ட 80 ஆண்டுகளை கடந்த இவரது இசைப்பயணத்தில் 36 மொழிகளில் பாடல்களை பாடி இருக்கிறார். தமிழில் இசைஞானி இளையராஜாவின் இசையில் இவர் பாடிய வளையோசை கல கல பாடல் இன்றும் புதுமை மாறாமல் இருக்கிறது.

நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா உட்பட அனைத்து முக்கிய விருதுகளையும் வாங்கிய லதா மங்கேஷ்கரின் இழப்பு ஈடு செய்ய முடியாதது என அவரவது மறைவுக்கு பாலிவுட் பிரபலங்களும், அரசியல் கட்சியினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பொதுமக்களின் அஞ்சலிக்காக லதா மங்கேஷ்கர் உடல் தாதர் சிவாஜி பார்க்கிற்கு எடுத்துச்செல்லப்படுகிறது. இவ்வளவு ஆண்டுகள் இசைக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட லதா மங்கேஷ்கர் திருமணமே செய்து கொள்ளாமல் இருந்து விட்டார்.

எல்லா தலைமுறை இசை கலைஞர்களுடனும் இணைந்து பணியாற்றிய பெருமை இவருக்கு உண்டு. காதல் பாட்டு என்றால் அதேற்கேற்றார் போல் கொஞ்சி பாடுவது, பக்தி பாடல் என்றால் குரலை மாற்றி பாடுவது என அசாத்திய திறமைசாலிதான் லதா மங்கேஷ்கர்.

மேலும், 1974-ம் ஆண்டு அதிக பாடல்களை பாடியதற்காக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த லதா மங்கேஷ்கருக்கு அவருடைய 90வது வயதில் இந்திய மகள் விருதை கொடுத்து மத்திய அரசு பெருமைப்படுத்தியும் இருக்கிறது. லதா மங்கேஷ்கரின் மரணம் இசைத்துறைக்கு ஏற்பட்ட பேரிழப்பு என்று பாலிவுட் பிரபலங்கள், அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்