ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 10, 2024

டிஆர்பி-யில் பாரதிகண்ணம்மாவை ஓரம் கட்டிய சீரியல்.. எல்லாம் நம்ம அங்கிள் பண்ற வேலதான்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் எந்த தொடர் அதிகமாக ரசிகர்களை கவர்ந்துள்ளது என்பது பொறுத்து ஒவ்வொரு வாரமும் டிஆர்பி ரேட்டிங் வருகிறது. இதில் ஒவ்வொரு வாரமும் சில மாற்றங்கள் ஏற்படும். ஏனென்றால் அந்த வாரம் எந்த தொடர் சுவாரசியமன காட்சிகள் இடம் தெரிகிறதோ அது டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடிக்கிறது.

இதில் பெரும்பாலான வாரங்களில் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடம் பிடிப்பது பாரதிகண்ணம்மா தொடர்ந்தான். ஆனால் இந்த வாரம் பாக்கியலட்சுமி தொடர் 9.6 ரேட்டிங்கில் டிஆர்பிஇல் முதலிடத்தை பிடித்துள்ளது. இதற்கு முக்கியமாக பார்க்கப்படுவது இத்தொடரில் நடிக்கும் கோபியின் கதாபாத்திரம் தான்.

அவருடைய ரியாக்ஷன், நடிப்பு அனைத்துமே அல்டிமேட் தான். பாக்கியா, ராதிகா இருவரையும் ஒரே நேரத்தில் சமாளிப்பது கோபியால் மட்டுமே முடியும். இத்தொடருக்கு அடுத்தபடியாக 8.9 ரேட்டிங்கில் இரண்டு தொடர்கள் கைப்பற்றியது. பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாரதிகண்ணம்மா இந்த இரு தொடரும் சமமான ரேட்டிங்கை பெற்றுள்ளது.

பாரதிகண்ணம்மா தொடரில் ஒரே கதையை ஜவ்வாக இருப்பதுபோல் ரசிகர்களுக்கு இத்தொடர் மேல் கொஞ்சம் அலுப்பு வந்துள்ளது. ஆனால் லட்சுமிக்கு தந்தை பாரதி என்பது தெரியவந்துள்ளது. இதனால் இனிமேல் பல டுவிஸ்டுகள் வர வாய்ப்புள்ளது. இதனால் அடுத்த வாரத்தில் பாரதி கண்ணம்மா தொடர் முதலிடத்தைப் பிடிக்க அதிக வாய்ப்பு உள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஜீவா தனது மாமனார் கடையில் வேலை பார்ப்பதால் தன் குடும்பமே தன்னை ஒதுக்கி வைத்தது போல் உணருகிறார். மேலும், தன்னால் குழந்தை பிறக்க முடியாது என்ற உண்மை தெரியாமல் இருந்த முல்லைக்கு தற்போது உண்மை தெரியவந்துள்ளது. இதனால் இத்தொடரிலும் அடுத்து சுவாரஸ்யமான கதைகளம் வர வாய்ப்புள்ளது.

ராஜா ராணி 2 தொடர் 7.4 ரேட்டிங்கில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இத்தொடரின் கதாநாயகி ஆலியா மானசா தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதால் இத்தொடரில் இருந்து விலகியுள்ளார். இந்நிலையில் இவருக்கு பதிலாக ரியா நடித்து வருகிறார். இதனால் அடுத்த வாரம் ராஜா ராணி 2 தொடர் இதே ரேட்டிங்கை தக்க வைக்குமா என்பது பெரிய கேள்விக்குறியாக உள்ளது.

- Advertisement -spot_img

Trending News