கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் நடிக்கும் அதிரடி ஆக்ஷன் திரில்லர் படம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’. எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் பி. மதன், கவுதம் மேனன் தயாரிப்பில் மார்ச் 2016ல் ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்டது, பின் காரணம் இது தான் என்று தெளிவாக விளக்கம் எதுவும் தராமல் ஜனவரி 2017ல் நிறுத்தி வைக்கப்பட்டது. தனுஷ் கவுதம் மேனன் இருவரும் தங்களின் அடுத்த பட வேலைகளை ஆரம்பித்து அதில் பிஸியாகி விட்டனர்.

பணப் பிரச்சினையின் காரணத்தால் தான் இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்ட து. தற்பொழுது, பணப் பிரச்சினை விவகாரம்  தீர்க்கப்பட்டதால் விரைவில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என தகவல்கள் வெளியாகின. இந்த படத்திற்கு ஷூட்டிங் லொகேஷன் பார்த்துவிட்டு திரும்பிய பொழுது தான் கவுதம் மேனனின் கார் விபத்துக்குள்ளானது.

{கார் விபத்தில் சிக்கிய கவுதம் மேனன். அவரை காப்பாற்ற உதவியவர் இவர் தான். }

இனிநிலையில் இப்படத்தின் ஷூட்டிங் மீண்டும் தொடங்கியுள்ளது. இதனை அவர்கள் தங்கள் அதிகாரபூர்வ த்விட்டேர் கணக்கில் தெரிவித்துள்ளார்.

வெற்றிமாறனின் வடசென்னை படப்பிடிப்பு முழுமை அடைந்த காரணத்தால், தன்  தாடியை முழுமையாக எடுத்து விட்டு  ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தில் நடிக்க தனுஷ் வந்துவிட்டார். மேலும் டிசம்பர்  ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடித்து விட்டு , பிப்ரவரியில் காதலர் தின வீக்கெண்டில்  வெளியிடலாம் என்று முடிவு செய்திருக்கிறதாம்  படக்குழு.

இந்த ஷூட்டிங் முடிந்த உடன் தனுஷ் மாரி 2விலும், கவுதம் மேனன் துருவநட்சத்திரம் படத்தில் தங்கள் கவனத்தை செலுத்துவார்கள்.