கடந்த 10 வருடத்தில் நியூ என்ட்ரியில் வெற்றி கண்ட ரெண்டு நடிகர்கள்.. தமிழ் சினிமாவின் போராத காலம்

கோலிவுட்டில் எம்ஜிஆர், சிவாஜி அவரை தொடர்ந்து ரஜினி, கமல் அதன் பிறகு விஜய், அஜித் என ஒவ்வொரு காலகட்டத்திலும் டாப் ஹீரோக்கள் என்ட்ரி கொடுத்து தமிழ் சினிமாவை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்றனர். அதன் பிறகும் 2000 முதல் 2010 வரை 7 இளம் நடிகர்கள் என்ட்ரி கொடுத்து தமிழ் சினிமாவின் பொற்காலமாக மாற்றினர்.

இந்த காலகட்டத்தில் தான் 2002 ஆம் ஆண்டு இயக்குனர் டி ராஜேந்திரனின் மகன் சிலம்பரசன் ‘காதல் அழிவதில்லை’ என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக கோலிவுட் என்ட்ரி கொடுத்தார். அதன் பிறகு வரிசையாக அடுத்தடுத்த பல படங்களை வெற்றிப்படங்களாக்கி சிம்புவும் தமிழ் சினிமாவின் இளம் நடிகராக தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். அதே சமயத்தில் தான் தனுஷும் ‘துள்ளுவதே இளமை’ படத்தின் மூலம் 2002 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் நுழைந்தார்.

Also Read: அட்வான்ஸை திருப்பி வாங்கிய தயாரிப்பாளர்.. விஜய் சேதுபதிக்கு ஏற்பட்ட அவமானம்

இப்போது பாலிவுட், ஹாலிவுட் வரை வெரைட்டி காட்டி கொண்டிருக்கும் தனுஷின் அசுரத்தனமான நடிப்பு டாப் ஹீரோக்களுக்கு எல்லாம் டஃப் கொடுக்கும் வகையில் இருந்தது. அதன் தொடர்ச்சியாக 2003 ஆம் ஆண்டு ஜெயம் ரவி, அதே ஆண்டில் ஜீவா பிறகு 2004 ஆம் ஆண்டு விஷால், 2005 ஆம் ஆண்டு ஆர்யா, 2007 ஆம் ஆண்டு கார்த்தி என அடுத்தடுத்து 7 இளம் ஹீரோக்கள் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்தனர்.

இப்படி 10 வருடத்தில் மட்டும் தமிழ் சினிமாவில் ஏழு நடிகர்கள் உருவெடுத்தனர். ஆனால் அடுத்த 10 வருடமான 2019 ஆம் ஆண்டுகளில் வெறும் இரண்டு இளம் நடிகர்கள் மட்டுமே சினிமாவில் என்ட்ரி கொடுத்து தாக்குப் பிடித்த நிற்கின்றனர். விஜய் சேதுபதி 2010 ஆம் ஆண்டு வெளியான ‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்தின் மூலமும், அதன் பிறகு 2012 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் ‘மெரினா’ படத்தின் மூலம் தமிழ் இண்டஸ்ட்ரிக்கு வருகை தந்தனர்.

Also Read: சிம்புவின் தோற்றம் வெட்கமாகவும், ஏமாற்றமாகவும் உள்ளது.. நம்பி ஏமாந்த பத்து தல இயக்குனர்

இவர்கள் இருவரும் தற்போது கோலிவுட்டில் ரவுண்டு கட்டிக் கொண்டு இருக்கின்றன. ஆனால் இவர்கள் வந்த அதே சமயத்தில் தான் ஆர்ஜே பாலாஜி, ஹிப் ஹாப் தமிழா, பிரதீப் ரங்கநாதன், கவின் ஆகியோரும் தமிழ் சினிமாவிற்கு நியூ என்ட்ரியாக வருகை தந்தனர். ஆனால் இதில் பிரதீப்  மட்டுமே வெற்றி பெற முடிந்தது.

மற்ற நடிகர்கள் எல்லாம் இப்போது வரை வெற்றிக்காக போராடிக் கொண்டிருக்கின்றனர். இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது கடந்த பத்து வருடங்களாக வெறும் இரண்டு நடிகர்கள் மட்டுமே என்ட்ரி கொடுத்திருப்பது தமிழ் சினிமாவின் போதாத காலம் ஆக பார்க்கப்படுகிறது.

Also Read: ரஜினிக்கு நடந்த பெரும் அவமானம்.. சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு காரணமான அந்த வார்த்தை

இந்த நிலைமை மாற வேண்டும். இன்னும் புதுப்புது இளம் நடிகர்களை வளர்த்து விட வேண்டும். இந்த விஷயத்தை தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் புரிந்து கொண்டு இளம் நடிகர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் தரப்பில் வேண்டுகோள் வைக்கின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்