Sports | விளையாட்டு
ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஒய்வு பெற்ற மலிங்கா. கடைசி போட்டியிலும் கலக்கல் பந்து வீச்சு. எமோஷனல் தருணத்தின் போட்டோ தொகுப்பு உள்ளே.
தனது யார்க்கர் பந்துகளால் எதிரணி பேட்ஸ்மேன்களை திணற வைப்பவர் மலிங்கா. இவர் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
நேற்று இலங்கை வங்கதேச அணியுடன் மோதிய போட்டியே அவருக்கு கடைசி ஒரு நாள் போட்டியாக அமைந்தது. இலங்கை அணி 8 விக்கெட் இழப்புக்கு 314 ரன்கள் குவித்தது. 315 என்ற இலக்குடன் பேட்டிங்கை தொடங்கிய வங்கதேச அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க ஆட்டக்காரர்களான தமீம் இக்பால், சௌம்யா சர்க்கார் ஆகிய இருவரையும் கிளீன் போல்ட் செய்து வெளியே அனுப்பினார் மலிங்கா.
சிறப்பாக பந்துவீசிய மலிங்கா, 38 ரன்களை கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 35 வயதான மலிங்கா இதுவரை 226 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 338 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
Wallpaper worthy.
Lasith Malinga bid farewell to ODIs on Friday, doing what he does best. ?? Sri Lanka crushed ?? Bangladesh by 91 runs and #SlingaMalinga walked away with three wickets to his name. #Malinga #malingaretires #LasithMalinga #SriLanka #Cricket pic.twitter.com/EvYwP444L6
— Sportstar (@sportstarweb) July 27, 2019
தனது கடைசி சர்வதேச ஒருநாள் போட்டியில் சிறப்பாக பந்துவீசிய பெருமையுடன் மலிங்கா ஓய்வு பெற்றார். அனைத்து வீரர்களும் வரிசையில் நின்று தங்களது பேட்டை தூக்கி அவருக்கு மரியாதையை செலுத்தினர்.
!!..The Sri Lanka players bid a farewell to the.. Yorker King ?….Salinga Malinga ..#Retirmentfromodicricket #ThankYouMalinga ?? pic.twitter.com/qaQCSeaRGa
— Aditya Kothari (@AdityaK15232246) July 26, 2019
மேலும் இப் போட்டிக்கு பிறகு மலிங்காவை தோளில் தூக்கி அந்த அணி வீரர்கள் சுற்றி வந்தனர்.
டெஸ்ட் போட்டிகளில் 2011-ல் ஒய்வு பெற்ற இவர். ஒருநாள் போட்டிகளிலும் தற்பொழுது ஓய்வு பெற்றுள்ளார்.
Lasith Malinga's Farewell – Special Moments: https://t.co/CFvNyRWtDS #ThankYouMalinga #Legend pic.twitter.com/CvgqNeulVw
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) July 27, 2019
டி 20 போட்டிகளில் அடுத்தாண்டு நடக்கவுள்ள உலகக்கோப்பை வரை விளையாடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
