Sports | விளையாட்டு
மாஸ் காட்டிய மலிங்கா.. எவரும் தொட முடியாத சாதனையை செய்தார்
நேற்று நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் மலிங்கா அடுத்தடுத்து 4 பந்துகளில் 4 விக்கெட் எடுத்து உலக சாதனையை செய்துள்ளார்.
மலிங்கா உலக கோப்பையுடன் ஓய்வு பெறுவார் என்று கூறிக் கொண்டிருந்த வேளையில் நேற்று அவர் செய்த சம்பவம்,” நான் இன்னும் பார்முல தான் டா இருக்கேன்”என்று கூறும் அளவுக்கு நெத்தியடி சாதனை ஒன்றை செய்துள்ளார்.
அதாவது மலிங்கா வீசிய இரண்டாவது ஓவரில் முதலிரண்டு பந்தில் ரன்கள் எதுவும் விட்டுக்கொடுக்காத நிலையில், மீதமிருந்த 4 பந்துகளிலும் 4 விக்கெட்டுகளை எடுத்து தான் டி20 ஸ்பெசலிஸ்ட் என்பதை நிரூபித்துள்ளார். இதேபோல் 2007 ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக 4 பந்தில் 4 விக்கெட்டுகள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட் வரலாற்றிலேயே சர்வதேச போட்டிகளில் ஐந்து முறை ஹாட்ரிக் விக்கெட்டுகளை பெற்றது, மலிங்கா மட்டுமே.
இதில் ஒருநாள் போட்டிகளில் மூன்று முறை ஹாட்ரிக் விக்கெட்டுகளையும், டி20 போட்டிகளில் இரண்டு முறை ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
மேலும் டி20 போட்டிகளில் முதல்முறையாக 100 விக்கெட்டுகளை எடுத்த முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இவரின் நேர்த்தியான பந்துவீச்சு, வயதாக ஆக ஆக மெருகேறிக்கொண்டே போகிறது. இலங்கை அணியில் தற்போது சீனியர் வீரர்கள் அனைவரும் ஓய்வு பெற்றுள்ள நிலையில், மலிங்காவும் ஓய்வு பெறும் மனநிலையில்தான் உள்ளார். இருந்தும் இப்படிப்பட்ட சாதனைகள் அவரைத் தொடர்ந்து விளையாட வைக்க உதவும். இதனையே இலங்கை கிரிக்கெட் வாரியமும் விரும்பும்.
இப்போட்டியில் இலங்கை அணி நியூசிலாந்து அணியை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
