Connect with us
Cinemapettai

Cinemapettai

lakshmy ramakrishnan

Tamil Cinema News | சினிமா செய்திகள்

19 வயது புகைப்படத்தை வெளியிட்ட லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.. அம்மணியை அப்படி இப்படி வர்ணிக்கும் நெட்டிசன்கள் !

தமிழ் படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து அதிகம் பிரபலமானவர் லட்சுமி ராமகிருஷ்ணன்.  இவர் நடிப்பில் வெளியான நாடோடிகள் திரைப்படத்தில் இவரது கதாபாத்திரம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

இப்படத்தில் சசிகுமார் அம்மாவாக நடித்து இவர் கண்கலங்கி நடிக்கும் காட்சிகள் இன்றும் ரசிகர் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்று கூறலாம். அதன்பிறகு வேட்டைக்காரன் படத்தில் ரவியின் அம்மாவாகவும்,சென்னையில் ஒரு நாள் படத்தில் கார்த்திக்கு அம்மாவாக நடித்துள்ளார்.

laxmi-ramakrishnan

laxmi-ramakrishnan

ஆனால் படங்களில் இவர் பிரபலமானதை விட சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானார். இந்நிகழ்ச்சியில் கேட்கும் கேள்விகள் மற்றும் அதற்கு இவர் கொடுக்கும் ரியாக்சன் தான் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இவர் அடிக்கடி உச்சரிக்கும் போலீசை கூப்பிடுவேன் எனக் கூறும் வசனம் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது.

lakshmi ramakrishnan

lakshmi ramakrishnan

தற்போது லட்சுமி ராமகிருஷ்ணனின் 1984 ஆம் ஆண்டு எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் குரங்கு வாலில் தீ வைத்தது போல் பார்க்குமிடமெல்லாம் லட்சுமி ராமகிருஷ்ணனின் சிறுவயது புகைப்படம் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தை பார்த்த சில ரசிகர்கள் 50 வயசு ஆனாலும் அப்போது இருந்தபடியே இப்பவும் சும்மா கும்முனு இருக்கிறார் என சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

Continue Reading
To Top