Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஒரு நல்ல நடிகையை துவைத்து எடுத்த சினிமா.. லட்சுமி மேனன் எங்கே?
சுந்தரபாண்டியன் படத்தில் அறிமுகமான லட்சுமி மேனன் அந்தப் படத்திற்கு சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதை பெற்றார். ஆனால் அதுதான் அவர் கடைசியாகப் பெற்ற விருதும் கூட. கும்கி படத்தில் நடித்தார் அதற்கு கூட விருது கிடைக்கவில்லை. ஆனால் நாமினேஷன் வரை சென்றார். இப்பொழுது லட்சுமிமேனன் எங்கே இருக்கிறார் என்ன செய்து கொண்டிருக்கிறார்?.
சினிமாவை பொறுத்தவரையில் நடிகர்கள் அளவுக்கு நடிகைகள் முன்னேறுவது மிகவும் கடினம் அதில் ஒரு சிலர் சிம்ரன், ரம்பா, குஷ்பு போன்ற முன்னணி நடிகைகள் வெற்றி பெற்றார்கள். தற்போது அதன் வரிசையில் நயன்தாரா இருக்கிறார். நடிகைகளுக்கு தான் இங்கு பஞ்சமே இல்லை தமிழ்நாட்டை விட்டால் கேரளா கேரளாவை விட்டால் ஆந்திரா ஆந்திரா விட்டால் பாலிவுட் என நடிகைகளின் அழகை மட்டுமே பார்த்து தேர்ந்தெடுப்பார்கள்.
ஏனென்றால் நடிகைகளுக்கு படத்தில் நடிப்பதற்கான காட்சிகள் மிகவும் குறைவாக இருக்கும் அவர்கள் வந்து போகும் நாலு சீன்களுக்கும் நான்கு பாடல்களுக்கு மட்டுமே பயன்படுத்துவார்கள். ஆனால் லட்சுமி மேனன் சுந்தரபாண்டியன், கும்கி போன்ற நல்ல படங்களில் நடித்து நல்ல நடிகை என்ற பெயரும் பெற்றார்.

lakshmi menon
ஆனால் நம்ம இயக்குனர்கள் சும்மா விடுவார்களா?. நடிப்பு மட்டும் போதாது அழகையும் இன்னும் மெருகேற்ற வேண்டும் என்று அவரது உடலை குறைக்க வைத்தார்கள். இவரும் மிகவும் ஒல்லியாக உடம்பை குறைத்தார். ஃபோட்டோ சூட் எல்லாம் வெளியிட்டார். ஆனால் மிகவும் மேக் அப் மிகவும் அதிகமானதால் அவர் யார் என்றே தெரியவில்லை.
பின்பு லட்சுமி மேனன் ரெக்க படத்தில் நடித்தார் அதோடு அவருடைய பெரிய பட்ஜெட் சினிமாக் கனவு மறைந்தது. தற்பொழுது சிப்பாய், யங் மங் சங் என இரண்டு படங்களில் நடித்து வந்தார் ஆனால் அந்த படங்கள் வெளிவருமா என்பது சந்தேகம்தான். நடுவில் உடம்பு வேறு பெரிய அளவில் ஏறிவிட்டது.
படவாய்ப்பு இல்லாமல் சும்மா வீட்டில் இருந்தால் இவ்வாறு ஏறுவதில் தவறில்லை நல்ல நடிகையாக இருக்கும் பொழுதும் அவருக்கு நல்ல கதாபாத்திரங்கள் நல்ல படங்களும் கொடுத்த தவறியது நமது இயக்குனர்கள் தான். பொதுவாக படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கொடுங்கள் அல்லது முடிந்த அளவு தமிழ் நடிகைக்கு வாய்ப்பு தர வேண்டும் அல்லது தென்னிந்திய நடிகைகளுக்கு வாய்ப்பு தரவேண்டும்.
அதையெல்லாம் விட்டுவிட்டு இவர்கள் பாலிவுட் செல்கிறேன் என்று பணத்தை இறைத்து படமாக எடுத்து தோல்வி கொடுத்து வருவது மிகப்பெரிய சங்கடம் தான். இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் லட்சுமி மேனன் நல்ல திரைப்படத்தில் நடித்து மீண்டு வர வேண்டும். கும்கி படத்தில் அவரின் நடிப்பை மறக்க முடியாதது உண்மை.
