fbpx
Connect with us

Cinemapettai

ஒரு சிப்பாயாக நின்று எங்களை காக்க வேண்டும் – விஜய் சேதுபதியிடம் வேண்டுகோள் வைத்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஒரு சிப்பாயாக நின்று எங்களை காக்க வேண்டும் – விஜய் சேதுபதியிடம் வேண்டுகோள் வைத்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியை டாக் செய்து, “சொல்வதெல்லாம் உண்மை” புகழ் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் பதிவிட்ட ட்வீட் பலரது கவனத்தையும் பெற்றுள்ளது.

‘ஆரோகணம்’, ‘நெருங்கி வா முத்தமிடாதே’, ‘அம்மணி’ ஆகிய படங்களை தொடர்ந்து லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கியுள்ள படம் ‘ஹவுஸ் ஓனர்’.

‘பசங்க’ படத்தில் நடித்த கிஷோர் கதாநாயகனாகவும், நடிகை விஜி சந்திரசேகரின் மகள் லவ்லின் சந்திரசேகர் கதாநாயகியாகவும் இப்படத்தில் நடிக்கின்றனர். கிஷோர், சுப்புலட்சுமி, சேத்தன் கடம்பி, கவிதாலயா கிருஷ்ணன், முரளி மோகனன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். எடிட்டிங் பிரேம் குமார். ஜிப்ரான் இசை. ஒளிப்பதிவு க்ரிஷ்ணாசேகர். இப்படம் ஜூன் 28 ரிலீசாகிறது. இதுவே இப்படக்குழுவின் பிளான்.

எனினும் ஜூன் 21 ரிலீசாகவேண்டியது படம் சிந்துபாத். எனினும் பிரச்சனை காரணமாக ரிலீசுக்கு முதல் நாள் இப்படம் ரிலீஸாவது என அறிவித்தனர். தற்பொழுது பேச்சு வார்த்தை சுமூகமாக முடியும் பட்சம், இந்த வாரம் ரிலீசாக வாய்ப்புள்ளது. இதனை பற்றி தான் ஸ்டேட்டஸ் தட்டியுள்ளார் லக்ஷ்மி.

“பெரிய படங்களின் நிச்சயமற்ற சூழல், சிறிய படங்களை கவிழ்த்து விடுகின்றது. நான் விஜய் சேதுபதியிடம் வேண்டுவது என்னவெனில்; ஒரு சிப்பாயாக நின்று சிறிய பட்ஜெட் மற்றும் நட்சத்திரங்கள் இல்லாத எங்கள் படத்தை காப்பாற்ற வேண்டும் என்பதே. ஏற்கனவே அந்த தேதியில் திட்டமிட்ட படங்களுக்கு உரித்த மரியாதையையும், நேரத்தையும் கொடுக்க வேண்டும் தயாரிப்பாளர்கள் என்பதே எனது வேண்டுகோள். உங்கள் படத்தை 15 நாட்களுக்கு முன்பே ரிலீஸ் தேதி அறிவித்து அதன் பின் நீங்கள் கலக்குங்க.” என பதிவிட்டுள்ளார்.

சென்னையில் மழை, வெள்ளம்  சமயத்தில் நடக்கும் காதல் கதை போல் திரைக்கதையை அமைத்துள்ளனர் இந்த டீம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top