Tamil Cinema News | சினிமா செய்திகள்
வனிதாவை சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு அழைத்த லட்சுமி ராமகிருஷ்ணன்! என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா!
சமீபகாலமாக தமிழ் சினிமாவை பொருத்தவரை சர்ச்சை நடிகையாக வலம் வருகிறார் நடிகை வனிதா. எல்லாம் முடிந்து தற்போது தான் மூன்றாவது கணவருடன் நிம்மதியாக வாழ முடிவெடுத்தார்.
ஆனால் திருமணமான முதல் நாளிலேயே வம்பு எழுந்துள்ளது. பீட்டர் பால் என்பவருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும், முதல் மனைவியுடன் விவாகரத்து பெறாமலேயே வனிதாவை மறுமணம் செய்துகொண்டார் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளது.
இதனால் பீட்டர் பால் மனைவி இந்த திருமணத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளார். ஆனால் வனிதா, ஒரு கோடி பணம் கேட்டு மிரட்டியதாகவும், கொடுக்க முடியாது என்று சொன்னவுடன் தான் கேஸ் போடுவதாகவும் தெரிவித்தார்.
எப்போதுமே இந்தமாதிரி பிரச்சினைகளை கவனித்து நல்ல தீர்ப்பு வழங்குபவர் லட்சுமி ராமகிருஷ்ணன். வனிதாவின் திருமணம் குறித்து டுவிட்டரில் அவர் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது.
வனிதாவின் சமீபத்திய கணவர் பீட்டர் பாலின் மனைவிக்கு ஏற்கனவே இருவரும் திருமணம் செய்வது தெரியாதா? எனவும், திருமணத்திற்கு முன்னாடியே தடுத்து நிறுத்தியிருக்கலாமே எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

lakshmy-tweet
வனிதாவும் அந்த பிரச்சனைகளை முடித்தவுடன் திருமணம் செய்து கொண்டிருக்கலாம் எனவும் கருத்து தெரிவித்துள்ளார். ரசிகர்களோ, சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு அழைத்து நியாயத்தை கேளுங்கள் என கிண்டல் அடித்து வருகிறார்கள்.
