fbpx
Connect with us

Cinemapettai

அடிக்கடி என்னிடம் அதை காட்டியபடி நின்ற உறவினர்.. லட்சுமி ராமகிருஷ்ணன் பகீர் செய்தி

Tamil Nadu | தமிழ் நாடு

அடிக்கடி என்னிடம் அதை காட்டியபடி நின்ற உறவினர்.. லட்சுமி ராமகிருஷ்ணன் பகீர் செய்தி

நடிகையும் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பல பெண்களுக்கு நியாயம் பெற்றுக் கொடுக்கும் நிகழ்ச்சியான சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியில் மூலம் பிரபலமானார்.

சமீபகாலமாக இதே நிகழ்ச்சியை பிரபல யூடியூப் சேனல் ஒன்றில் தொடர்ந்து நடத்தி வருகிறார். இருந்தாலும் அப்போது இருந்த சுவாரஸ்யம் தற்போது இல்லை. இந்நிலையில் தனக்கும் தன்னுடைய மகளுக்கும் நிகழ்ந்த தொந்தரவை பகிர்ந்துள்ளார்.

லட்சுமி ராமகிருஷ்ணனின் சிறு வயதில் அவருடைய உறவினர் ஒருவர் வேண்டுமென்றே லட்சுமியின் முன்னாள் அவரது ஜிப்பை திறந்து காட்டியபடியே நின்று கொண்டிருப்பாராம். விவரம் தெரிந்த பிறகு தான் அவர் செய்த ஒவ்வொன்றும் மனதில் ரணமாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் தனது மகள் லிப்டில் சென்று கொண்டிருக்கும் போது ஒருவன் திடீரென தனது பேண்டை அவிழ்த்துப் அவனுடையதை காட்டியதால் பதறியடித்து ஓடி வந்தாராம் அவரது மகள். சிசிடிவி யில் பார்த்த போதும் அவனது முகம் சரியாக தெரியாததால் விட்டு விட்டார்களாம்.

இவ்வளவு பிரபலமாக இருக்கும் என்னிடமே இவ்வளவு சேட்டைகளை காட்டும் பல ஆண்கள் முகம் தெரியாத கடைக்கோடியில் உள்ள ஒரு பெண்ணிடம் எப்படியெல்லாம் தவறாக நடந்து கொள்வார்கள் என்பதை யோசித்தாலே நெஞ்சம் பதைபதைக்கிறது என்று நெகிழ்ச்சி பொங்க கூறியுள்ளார்.

Continue Reading
To Top