Tamil Cinema News | சினிமா செய்திகள்
பல பேர் கூட போனவர்களுக்கு ஒருத்தனுக்கு ஒருத்தி கலாச்சாரம் தெரியாது.. வனிதாவை கிழித்தெறிந்த லட்சுமி ராமகிருஷ்ணன்!
வனிதாவின் மூன்றாவது திருமணம் தான் தற்போது கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் முதல் சினிமா உலகமும் மூக்கை முளைத்துள்ளது தான் தற்போது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
நாளுக்கு நாள் வனிதா மற்றும் பீட்டர் பால் ஆகிய இருவரைப் பற்றிய சர்ச்சை செய்திகள் அதிகமாகிக்கொண்டே வருகின்றன. அதிலும் பீட்டர் பால் பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக அவரது மனைவியே குற்றம் சாட்டினார்.
இந்நிலையில் சமீபத்தில் நேரலையில் வனிதாவுடன் குழாயடி சண்டை போட்டார் சொல்வதெல்லாம் உண்மை புகழ் லட்சுமி ராமகிருஷ்ணன். அந்தப் பேட்டியில் வனிதா ஆரம்பத்திலேயே உன்னையை கிழித்து எறிய தான் இந்த பேட்டிக்கு ஒத்துக் கொண்டேன் என தெரிவித்தது பதட்டத்தை அதிகப்படுத்தியது.
தொடர்ந்து பேசிய வனிதா, ஒரே ஒரு புருஷன் கட்டிக்கிட்டா மட்டும் நீ என்ன யோக்கியமா எனவும், உன்னோட சங்கதி எல்லாம் வெளியே விட்டா நாறிப் போய்விடும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் சரிதான் போடி என மிகவும் ஒருமையிலும் கொச்சையாகவும் பேசியிருந்தார்.
இதனால் அந்த நேரடி ஒளிபரப்பு பேட்டியை கட் செய்து விட்டு கிளம்பினார் லட்சுமி ராமகிருஷ்ணன். அவர் போன பிறகும் லட்சுமி ராமகிருஷ்ணனை தொடர்ந்து கண்டபடி பேசி கொண்டிருந்தார் வனிதா. மேலும் அந்த ஒளிபரப்பை ஏற்படுத்திய யூடியுப் சேனலையும் கண்டபடி பேசி விட்டார்.
இதனால் அந்த யூடியூப் சேனல் இனி வனிதா சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தங்களது சேனலில் வெளியிடப் போவதில்லை என தெரிவித்தனர். இந்த அறிவு முன்னாடியே இருந்துருக்கணும் என ரசிகர்கள் தொடர்ந்து அந்த சேனலை கிழித்தெறிந்து வருகின்றனர்.
இந்த பிரச்சனைக்கு பிறகு லட்சுமி ராமகிருஷ்ணன் தனது டுவிட்டர் பக்கத்தில், வனிதாவை மறைமுகமாக பல பேருடன் சென்றவர்களுக்கு ஒருவன் ஒருத்தி கலாச்சாரம் தெரியாது எனவும், அதனுடன் சேர்த்து சில கெட்ட வார்த்தைகளையும் இணைத்து கண்டபடி பேசி விட்டார் லட்சுமி ராமகிருஷ்ணன்.
இப்படியே பேசிட்டு இருந்தா எப்படி, யாரு பெருசுன்னு அடிச்சு காட்டுங்க என ரசிகர்கள் நக்கலான கமெண்ட்டுகளை அவர்களது பதிவுகளில் தெரிவித்து வருகின்றனர்.
