லட்சுமி ராமகிருஷ்ணன்  நடிகை, இயக்குனர், டிவி தொகுப்பாளர், பேஷன் டிசைனர் என்று பல துறைகளில் கலக்குபவர். பல விஷயங்களில் இவர் ஜாம்பவானாக இருந்தாலும் இவருக்கு தனி அங்கீகாரம் வாங்கிக்கொடுத்து “சொல்வதெல்லாம் உண்மை”  நிகழ்ச்சி. பெண்கள்  மத்தியில் இவருக்கு தனி செல்வாக்கை ஏற்படுத்தி கொடுத்தது. எனினும் இந்நிககிழ்ச்சியால் பல பிரச்சனைக்களுக்கும், கிண்டல்களுக்கும் இவர் ஆளாகியுள்ளார் என்பது நாம் அறிந்ததே.

இந்த நிகழ்ச்சி 1500 எபிசோட் கடந்து வெற்றி நடை போட்டது. இருந்தாலும்  மேமே போடுபவர்கள் தொடங்கி, பாடலாசிரியர், காமெடியன்கள், சீரியல்கள், டிவி ஷோகள் , படங்கள் என இவரின் நிகழ்ச்சியை கலாய்த்து வருகின்றனர்.

நேற்று ரிலீசான படம் அருவி. இப்படத்தின் ஒரு பகுதி இந்த இந்நிகழ்ச்சியின் மறுப்பக்கத்தை காட்டுவது போல் காட்சி படுத்தப்பட்டுள்ளது.

aruvi

இந்த நிகழ்ச்சி அனைத்தும் TRP ஏறவேண்டும் என்பதற்க்காக எடுக்கப்படும் ஒன்று.  இதில்  மக்களை வேண்டுமென்றே அழ வைக்கின்றனர், அடிப்பதற்கும் தூண்டுகின்றனர். தொகுப்பாளர்  பேசுவது எல்லாம் இயக்குனர் சொல்லி கொடுப்பது தான் என்பது போன்ற காட்சிகள் நிறைய உள்ளது அருவி படத்தில். தொலைக்காட்சி நிறுவனத்தின் பெயரை “பீ டிவி” என்று நிகழ்ச்சி பெயரை ‘சொல்வதெல்லாம் சத்தியம்’ என்று மட்டும் மாற்றிவிட்டார் இயக்குனர் அருண் பிரபு.

இந்நிலையில் நேற்று சினிமா விமர்சகர் தன் ட்விட்டரில்

‘அருவி படத்தை அனைவரும் பாராட்டுகின்றனர், லட்சுமி ராமகிருஷ்ணன் கடுப்பாகிருப்பாரோ? ‘    என்று விஷமமான டீவீட்டை போட்டார்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக இன்று காலை

‘இந்தப்படம் பற்றி  சில மாதங்களுக்கு முன் சென்சார் ஆன பொழுதே கேள்விப்பட்டேன். இது சிறந்த படம், நீங்கள் எந்த விதத்திலும் ரியாக்ட் ஆகாதீர்கள் என்றனர். எனினும் இயக்குனர் சிறந்த படத்தையே கொடுத்துள்ளார். பெண்மையை பெருமை படுத்தும் விதமாக படம் எடுத்துள்ளார். ஆனாலும் பாதிக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட பெண்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்யும் நிகழ்ச்சியை கொச்சை படுத்தியுள்ளார்.’ என்றார்.

சிறப்பான படம் தான், எனினும் உங்களை அசிங்கப்படுத்தியது வருத்தமளிக்கிறது என்று ஒரு ரசிகை பதில் அளித்தார்.

‘அது பரவாயில்லை. நல்ல படம் தானே எடுத்துள்ளார். இவ்வாறு தவறாக சித்தரிப்பதால், என் நிகழ்ச்சியை பார்ப்பவர்கள் மனம் மாற வாய்ப்பில்லை. அப்படி நிகழ்ச்சியை புறக்கணித்தால், நான் சரியாக வேலை பார்க்க வில்லை என்று அர்த்தம்’ என்றும் பதில் கூறியுள்ளார்.

தனக்கு சரி என தோன்றும் கருத்துக்களை மறைக்காமல் சொல்லக்கூடியவர் ஆகிற்றே லட்சி ராமகிருஷ்ணன். சிறுது நேரம் கழித்து மீண்டும் ஒரு ட்வீட் போட்டார்.

“தமிழகத்தின் இளம் படைப்பாளிகள் மற்றவர்களை கேலி, கிண்டல் செய்தும்,அடுத்தவர்களை கலாய்த்து, பிறரை சிறுமை படுத்தி  படம் எடுக்கின்றனர் . ஆனால் பாலிவுட் சினிமாவில் நிஜ வாழ்க்கை  ஹீரோக்களை வைத்து படம் எடுக்கின்றார்.அவருடன் கலந்துரையாடியது மகிழ்ச்சி ” என தெரிவித்துள்ளார்.

இப்பொழுது அவர் போட்ட இந்த  ட்வீட்  நம்  நெட்டிஷன்கள் கடுமையாக   விமர்சித்து வருகின்றனர்.  மேலும் ஹிந்தியில்  ஒரு சில படங்களை பார்த்துவிட்டு இப்படி கூறக்கூடாது. இங்கேயும்  தரமான படங்கள் நிறைய இருக்கிறது என்கிறார்கள்.

சினிமாபேட்டை கமெண்ட்ஸ்

“என்னம்மா நீங்க இப்படி பண்றீங்களே மா ?”