சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியின் மூலம் பல குடும்ப பஞ்சாயத்துக்களை வீதிக்கு எடுத்து வருபவர் லட்சுமி ராமகிருஷ்ணன். சமீபத்தில் இந்த நிகழ்ச்சியால் ஒருவர் உயிர் இழந்தது பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.

இதில் லாரி ட்ரைவர் ஒருவர் தன் மகள்களிடமே தவறாக நடந்துக்கொள்ள முயற்சி செய்தார் என கூறப்பட்டது, அதை ஒளிப்பரப்ப மாட்டோம் என கூறியுள்ளனர்.

மீறி ஒளிப்பரப்பியதால் அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார், ஆனால், அவர் அப்படிப்பட்டவர் இல்லை என அவருடைய குடும்பத்தினர் சிலரே கூறுகின்றனர்.

மேலும், இந்த தற்கொலைக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என அந்த தொலைக்காட்சி மீது புகார் கொடுக்க சென்ற போது லட்சுமி ராமகிருஷ்ணன் பெயரை இதில் இருந்து எடுங்கள் என்று கூறிவிட்டு தான் புகாரை எடுத்துள்ளனர்.

அவர் பெயரை மட்டும் போலிஸார் விட்டது ஏன் என்பது தற்போது வரை மர்மமாகவே உள்ளது.