Tamil Cinema News | சினிமா செய்திகள்
குறும்பட லக்ஷ்மியின் அடுத்த படத்தின் மாஸ் அப்டேட்.!

ஓடு ராஜா ஓடு படத்திற்காக ஒன்றிணைந்த திரையுலக பிரபலங்கள்.!
தமிழ் சினிமாவில் வெளியாகி மெகா வரவேற்ப்பை பெற்று ஜோக்கர் படத்தின் ஹீரோ குரு சோமசுந்தரம் தற்போது ஜதின் மற்றும் நிஷாந்த் ஆகியோரின் இயக்கத்தில் விஜய் மூலன் அவர்களின் தயாரிப்பில் உருவாகி வரும் ஓடு ராஜா ஓடு என்ற காமெடி திரில்லர் படத்தில் நடித்து வருகிறார். மேலும் இது Dark Humour கதையாக இருக்கும் எனவும் கோலிவுட்டில் பேசப்பட்டு வருகிறது.

odu raja odu
அடுத்த மாதம் ( ஆகஸ்ட் ) உலகம் முழுவதும் வெளியாக உள்ள இந்த படத்தில் நடித்துள்ள நடிகர், நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களின் விவரங்கள் தற்போது தெரிய வந்துள்ளது.
நடிகர் நடிகைகள்:
நாசர், குறும்படங்களில் நடித்த லட்சுமி பிரியா, ஆனந்த் சாமி, ஆஷிகா சால்வன், வினோத், ரவீந்திர விஜய், வெங்கடேஷ் ஹரிநாதன், கே.எஸ்.அபிஷேக், பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் மற்றும் தீபக் பாகா.
தொழில் நுட்ப கலைஞர்கள்:
திரைக்கதை: நிஷாந்த் ரவீந்திரன், தயாரிப்பாளர்: விஜய் மூலன்
தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனம்: விஜய் மூலன் டால்கீஸ் மற்றும் கேண்டில் லைட் ப்ரொடக்ஷன்ஸ்
போட்டோ கிராபர்: ஜதின் சங்கர் ராஜ் (இயக்குனர்), சுனில் சி.கே, எடிட்டிங்: நிஷாந்த் ரவீந்திரன் (இயக்குனர்),மியூசிக்: தோஷ் நந்தா, ஒலி: விஜய் ரத்தினம், ஏ.எம் ரஹ்மத்துல்லா
