ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கரு’. சாய் பல்லவி நடித்துள்ள இப்படம் ரிலீஸுக்கு தயாராகவுள்ளது. இதனையடுத்து ஏ.எல்.விஜய் இயக்கும் படத்தின் பெயர் ‘லக்ஷ்மி’.

prabhu deva

இப்படத்தில் பிரபு தேவா, ஐஸ்வர்யா ராஜேஷ், மற்றும் குழந்தை தித்யா, கருணாகரன் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். விக்ரம் வேதா புகழ் சாம்.சி.எஸ் இசையமைத்து வரும் இப்படத்திற்கு நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார், ஆண்டனி படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இப்படம் நடனத்தை மையமாக கொண்டு உருவாக்கப்படும் படம்

ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் ரெடியாகும் இதனை ‘டிரைடென்ட் ஆர்ட்ஸ் – பிரமோத் ஃபிலிம்ஸ்’ நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது. இன்று மாலை தலைப்பின் முதல் லுக் போஸ்டர் வெளியானது.

LAKSHMI

இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வந்தது. தற்போது, படத்தின் ஷூட்டிங் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தற்பொழுது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

LAKSHMI

மேலும் நாளை மாலை டீஸர் வெளியாகுமாம். ஏற்கெனவே, பிரபு தேவா – விஜய் காம்போவில் வெளியான ‘தேவி’ சூப்பர் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.