‘வேதாளம்’ படத்தில் அஜீத் தங்கையாக நடித்த பிறகு லட்சுமி மேனன் நடித்து திரைக்கு வரவுள்ள படம் ‘மிருதன்’. ஜெயம் ரவி ஹீரோ. தமிழில் முதல் ரத்த காட்டேறி கதை படமாக உருவாகி இருக்கும் இதை சக்தி சவுதர்ராஜன் இயக்கி உள்ளார்.

இதுபற்றி லட்சுமிமேனன் கூறியது:டிராபிக் கான்ஸ்டபிள் வேடத்தில் ஜெயம் ரவி நடிக்க, அவருக்கு ஜோடியாக நான் நடிக்கிறேன். பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி படம் பார்த்தேன். அப்போது முதல் ஜெயம் ரவி மீது எனக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. அவருடன் நடிக்க வாய்ப்பு வந்தபோது பரவசம் அடைந்தேன்.
இதில் டாக்டர் வேடம் ஏற்றிருந்தாலும் சில ஆக்‌ஷன் சீன்களில் நடிக்க வேண்டி இருந்தது. அதற்கு ரவி நன்கு ஒத்துழைப்பு தந்தார். வேதாளம் படத்தில் அஜீத் தங்கையாக நடித்ததுபோல் தொடர்ந்து தங்கை வேடத்தில் நடிக்கமாட்டேன்.

அதிகம் படித்தவை:  ஸ்கூல் பொண்ணு மாதிரி தெரியனும் - சிகிச்சைக்கு போகும் லக்ஷ்மி மேனன்

அதில் எனக்கு ஆர்வம் இல்லை.இவ்வாறு லட்சுமி மேனன் கூறினார். ‘மிருதன்’ படத்துக்கு தணிக்கையில் ‘ஏ’ சான்றிதழ் தரப்பட்டதால் பட குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதற்கு அரசின் வரி விலக்கும் கிடைக்காது, குழந்தைகளும் படம் பார்க்க முடியாது. எனவே ‘யு’ சான்று கேட்டு ரிவைசிங் கமிட்டிக்கு படத்தை கொண்டு செல்ல பட குழு முடிவு செய்துள்ளது.