கும்கி படத்தில் அறிமுகமான லக்ஷ்மி மேனன் அடுத்தடுத்து 3 வெற்றிப்படங்களில் நடித்தவர், நடிப்புக்கு கேப் விட்டு மீண்டும் படிக்க சென்றார். தேடி வரும் வாய்ப்புகளில் மட்டும் நடிப்பேன் என்று கூறிக்கொண்டிருந்த லக்ஷ்மி மேனனை யாரும் கண்டு கொள்ளவில்லை.

தனக்கான இடத்தை தக்கவைத்துக்கொள்ள மீண்டும் நடிக்க வந்தார். முன்பு போல் போதிய வரவேற்ப்பு இல்லாததால் சற்று அப் செட்டில் இருந்த லக்ஷ்மி மேனன், விஜய் சேதுபதியுடன் ‘றெக்க’ படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். பிறகு, ஜீவா நடிக்கும் புதிய படத்திலும் வாய்ப்பு கிடைத்தது.

இந்நிலையில், லட்சுமி மேனன் குண்டாக இருப்பதாக சில இயக்குனர்கள் கூறியதையடுத்து கச்சிதமான உடற்தோற்றத்துக்கு மாற முடிவு செய்தார். உடல் இளைக்க ஆயுர் வேத சிகிச்சையும் தவறாமல் ஜிம்முக்கும் செல்கிறாராம் லக்ஷு.