Tamil Cinema News | சினிமா செய்திகள்
கும்கி கூட்டணியுடன் பவர் ஃபுள் ரீஎன்ட்ரியில் லட்சுமி மேனன்! புலி பதுங்குவது பாய்வதற்காக தானா
தமிழ் சினிமாவில் சுந்தரபாண்டியன் என்னும் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தான் லட்சுமிமேனன். இதைத் தொடர்ந்து இவர் கும்கி, குட்டிப்புலி, பாண்டியநாடு, மிருதன் போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.
இவர் தமிழ் சினிமாவில் கடைசியாக 2016-ஆம் ஆண்டு ‘ரெக்க’ படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார். பிறகு அவர் படிப்பில் கவனம் செலுத்த போகிறேன் என்று கூறி சென்றுவிட்டாராம்.
லட்சுமிமேனன் தமிழ் சினிமாவில் அடுத்ததாக விக்ரம் பிரபுக்கு ஜோடியாக மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளாராம். இவர்கள் இருவரும் ஏற்கனவே ‘கும்கி’ படத்தில் நடித்து பெரிய ஹிட்டடித்த ஜோடி.
இயக்குனர் முத்தையா இயக்க உள்ள இப்படத்திற்கு ‘பேச்சி’ என்ற பெயரிடப்பட்டுள்ளதாகவும், இந்தப் படம் நேரடியாக OTT யில் திரையிடப்பட உள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.
லட்சுமி தற்போது திடீரென ஸ்லிம்மாகி பல போட்டோகளையும் பரதநாட்டிய வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார் என்பது நாம் அறிந்ததே.
இயக்குனர்கள் பலர் இவருடைய எடையை காரணம் காட்டி பல படங்களில் இருந்து இவரை தள்ளி வைத்தனராம். இதனால் இவர் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக பிட்டாக மாறி இருக்கிறாராம்.
‘புலி பதுங்குவது பாய்வதற்காக தான்’ என்பது போல இவ்வளவு நாளா லட்சுமிமேனன் தன்னை மெருகேற்றி புது வாய்ப்புகளை தன்னைத் தேடி வர வச்சு இருக்காங்க.
