Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஷாலுடன் இருந்த உறவு என்ன? ஓபன் ஸ்டேட்மென்ட் கொடுத்த லட்சுமி மேனன்
தமிழ் சினிமாவில் ஒரு ஜோடி பல படங்களில் நடித்தால் அவர்களைப் பற்றிய கிசுகிசுக்கள் வெளி வருவது ஒன்றும் புதிதல்ல. அப்படித்தான் விஷால் மற்றும் லட்சுமிமேனன் தொடர்ந்து சில படங்களில் நடித்தபோது பல கிசுகிசுக்கள் வெளிவந்தன.
ஆச்சரியம் என்னவென்றால் அந்த கிசுகிசுக்கள் எல்லாமே உண்மை என்பது போல் பரவியதுதான். இருவரும் காதலித்தார்கள் என அனைவரும் நம்பவே ஆரம்பித்து விட்டார்கள்..
பொதுவாக லட்சுமிமேனன் எந்த நடிகர்களையும் நடிப்பதற்கு தொட்டுக் கூட அனுமதிக்காத நிலையில் விஷாலுடன் நடிக்கும் போது நெருக்கமான முத்தகாட்சிகளில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
விஷால் இதுவரை பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன் போன்ற படங்களில் ஜோடியாக நடித்துள்ளார். லட்சுமி மேனன் நடிக்க ஆரம்பித்த சில படங்களிலேயே முன்னணி நடிகையாக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் திடீரென அவர் தமிழ் சினிமாவை விட்டு விலகுவதற்கு விஷால் தான் காரணம் என பல செய்திகள் வெளிவந்த நிலையில் சமீபத்திய பேட்டியில் அதற்கான விடையை தெரிவித்துள்ளார்.
விஷாலுடன் என்னை கிசுகிசுக்கப்பட்டது உண்மைதான், ஆனால் அந்த கிசு கிசு உண்மை இல்லை எங்களுக்குள் நட்பு மட்டுமே இருக்கிறது. அந்த கிசுகிசுக்களை எல்லாம் கண்டுகொள்ள மாட்டேன் என்று பலமுறை கூறி உள்ளார். மேலும் சிறிது காலம் தானே சினிமாவை விட்டு ஒதுங்கி படிப்புகளில் கவனம் செலுத்தலாம் என இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
அடுத்து விஷால் திருமணம் பற்றி லட்சுமிமேனனிடம் கேட்டபோது, கல்யாணத்துக்குச் கூப்பிட்டார்னா அப்போ இருக்குற சூழலைப் பொறுத்து போவேன். நானில்லாமல் விஷால் திருமணமா என்று கூறியுள்ளாராம்.
சமீபத்தில் ஒரு தொழிலதிபர் மகளுடன் நிச்சயதார்த்தம் செய்த விஷால் திடீரென கல்யாணத்தை நிறுத்தியதற்கு லட்சுமி மேனன் தான் காரணம் என வதந்திகளை சினிமாக்காரர்கள் கிளப்பி விடாமல் இருந்தால் சரி..
