Tamil Cinema News | சினிமா செய்திகள்
லக்ஷ்மி மேனனுக்கு திருமணமா? மாப்பிளை யார் தெரியுமா?
லட்சுமி மேனன்.வீட்டில் உள்ளவர்கள் இவருக்கு திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளனர். அதற்காக தற்போது மாப்பிள்ளை தேடிவருவதாக தகவல் கிடைத்துள்ளது.

தமிழ் சினிமாவில் கும்கி படம் மூலம் அறிமுகமானவர் நடிகை லட்சுமி மேனன். அதன் பிறகு லட்சுமிமேனன் சசிகுமாருடன் ஜோடியாக சுந்தரபாண்டி படத்தில் நடித்தார். இந்த இரண்டு படங்களும் 100 நாட்களுக்கு மேல் ஓடி இவருக்கு தமிழ் சினிமாவில் ஒரு இடத்தைப் பிடித்துக் கொடுத்தது. ஆனால் அதன் பிறகு இவர் நடித்த எந்த படமும் இவருக்கு புகழைத் தேடி வரும் அளவிற்கு வெற்றி அடையவில்லை.
நடிகை என்றாலே சிறிது நாட்களிலேயே காதலும் கிசுகிசுவும் வந்துவிடும். இவர் விஷாலுடன் சிகப்பு மனிதன் படத்தில் நடித்தார். இந்த படத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதைப் பற்றிய எந்தவொரு மறுப்பும் அவர்கள் கூறவில்லை.
தற்போது லட்சுமி மேனனுக்கு படவாய்ப்புகள் எதுவும் வராததால் அவரது வீட்டில் உள்ளவர்கள் இவருக்கு திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளனர். அதற்காக தற்போது மாப்பிள்ளை தேடிவருவதாக தகவல் கிடைத்துள்ளது, விரைவில் மாப்பிளை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்க படுகிறது.
