கும்கியில் பேர் எடுத்து சுந்தரபாண்டியனில் ராசி நடிகை என்று கொண்டாடப்பட்டு, இவர் நடித்த படங்கள் அத்தனையும் ஹிட் என்று பேசப்பட்டவர் லட்சுமி மேனன்.

இவர் கல்லூரி வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு சினிமாவுக்கு ஒரு கேப் விட்டார். அவ்வளவுதான், நடுவில்…மஞ்சிமா முதல் கீர்த்தி வரை வந்து குவிந்துவிட்டார்கள்.

கல்லூரி பிடிக்கவில்லை என்று மீண்டும் நடிக்க வந்தபோது கைகொடுத்தது விஜய்சேதுபதி படம் “றெக்க”. அந்த படத்தில் லட்சுமி மேனன் குண்டாக இருக்கிறார், பழைய மாதிரி பப்ளி ஹீரோயினாக இல்லை என்று சொல்ல, உடலை குறைக்க போனார்.

சூப்பரான உடலமைப்பில் வந்தவருக்கு, மீண்டும் விஜய்சேதுபதியே தன் கருப்பன் படத்தில் வாய்ப்பு கொடுத்தார். இது ரேணிகுண்டா இயக்குனர் பன்னீர் செல்வம் படம்.

ஏதோ ஒரு மிஸ்அன்டர்ஸ்டான்ட் ஹீரோ, ஹீரோயினுக்குள்ளயாம். லட்சுமியை நீக்கிவிட்டு, பலே வெள்ளையத்தேவா ஹீரோயின் தான்யாவை ஹீரோயினாக்கி விட்டார்கள்.