Tamil Cinema News | சினிமா செய்திகள்
அடுத்தவன் வீட்டு கக்கூசை நான் ஏன் கழுவணும்.. ரசிகருடன் குழாயடி சண்டை போட்ட லட்சுமி மேனன்
அடுத்ததாக ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் பிக்பாஸ்-4 நிகழ்ச்சி தான்.
கடந்த 3 சீசன்களை வெற்றிகரமாக முடித்த விஜய் டிவி இந்த முறை நான்காவது சீசனை ஒளிபரப்பத் தயாராகியுள்ளது. வழக்கம்போல் இந்தச் சீசனையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்க உள்ளார்.
இந்நிலையில் தமிழ் சினிமாவில் உள்ள இளம் நடிகர் நடிகைகள் அனைவரது பெயரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக புரளி கிளப்பிவிட்டனர்.
அதில் தமிழ் சினிமாவில் இருந்து கொஞ்சம் காலம் விலகியிருக்கும் மலையாள நடிகையான லட்சுமி மேனன் பெயர் மிகவும் அடிபட்டது. ஆனால் தான் அதில் கலந்து கொள்ளவில்லை என பலமுறை கூறி விட்டார்.
இருந்தாலும் ரசிகர்கள் விடுவதாக இல்லை. அளவுக்கதிகமாக புரளி கிளம்பிய நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தானே லைவ் வந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போவதில்லை என கூறிவிட்டார்.
மேலும் இன்னொருவர் பயன்படுத்திய கழிவறைகள் மற்றும் சாப்பிட்ட தட்டுகளை கழுவ எனக்கு எந்த அவசியமும் இல்லை என ரசிகர்களிடம் தாறுமாறாக சண்டைக்கு வந்துள்ளார் லட்சுமி மேனன்.
இந்நிலையில் லட்சுமிமேனன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை என்பது உறுதியாகிவிட்டது. இதனால் அடுத்ததாக வேறு ஒரு நடிகையின் பெயரை பரப்பிவிட ஆரம்பித்துள்ளனர்.
