miruthan-lakshmi-menonகடந்த ஆண்டு ப்ளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்ற நடிகை லட்சுமிமேனன், கொச்சி கல்லூரி ஒன்றில் ‘பி.ஏ.ஆங்கில இலக்கியம் படித்து வரும் நிலையில் அவர் நடித்து முடித்துள்ள ‘மிருதன்’ திரைப்படத்தில் அவர் டாக்டராக நடித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

தமிழின் முதல் ஜோம்பி திரைப்படமான ‘மிருதன்’ படத்தில் டிராபிக் போலீசாக ஜெயம் ரவி நடித்து வருவதாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது லட்சுமிமேனன் டாக்டராக நடித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் லட்சுமிமேனனின் டாக்டர் கேரக்டர் மிகச்சிறப்பாக வந்துள்ளதாகவும், லட்சுமிமேனன் கேரியரில் இந்த படம் ஒரு முக்கியமான படமாக இருக்கும் என்றும் படக்குழுவினர் உறுதிபட தெரிவித்துள்ளனர்.

சக்தி செளந்திரராஜன் இயக்கத்தில் டி.இமான் இசையில் உருவாகியுள்ள ‘மிருதன்’ திரைப்படம் வரும் 19ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரீலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.