Tamil Cinema News | சினிமா செய்திகள்
ரசிகர் கேட்ட கேள்விக்கு கெட்ட வார்த்தையில் பதில் சொன்ன லட்சுமி மேனன்.. கொஞ்சம் ஓவராத்தான் போறாங்களோ!
தமிழ் சினிமாவில் மலையாள நடிகைகளுக்கு எப்போதுமே ஒரு விதமான வரவேற்பு இருக்கும். அப்படி வந்த புதிதிலேயே தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்தவர் தான் லட்சுமிமேனன்.
இவர் நடித்த படங்களில் தோல்வி படங்கள் என்று பார்த்தால் மிக மிக குறைவு தான். இவருக்கு வந்த புதிதிலேயே ஏகப்பட்ட ரசிகர் கூட்டம் உருவானது.
இந்நிலையில் திடீரென உடல் எடை கூடியதால் ரசிகர்கள் லட்சுமி மேனனை ஒதுக்கி விட்டார்கள். நானும் உடல் எடையை குறைத்து வருகிறேன் என படிப்புடன் சேர்த்து உடலையும் கவனித்து வந்தார்.
தற்போது படிப்பு வேலையெல்லாம் முடிந்தவுடன் மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். ஒரு சில படங்களில் கமிட்டாகி விட்டாராம்.
இது ஒருபுறமிருக்க சமீபகாலமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் அவ்வப்போது உரையாடி வருகிறார் லட்சுமி மேனன்.
அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு விவகாரமான பதிலளித்து சர்ச்சைகளில் மாட்டி வருகிறார். அப்படித்தான் ரசிகர் ஒருவர் லட்சுமிமேனனிடம் கல்யாணம் பற்றி கேட்டுள்ளார்.
கல்யாணம் என்பது மிகைப்படுத்தப்பட்ட செ**ஸ் என கூறியுள்ளது பலருக்கும் சங்கடத்தை கொடுத்துள்ளது. மேலும் ஒரு ரசிகர் நீங்கள் சிங்கிளா என்று கேட்டதற்கு, இல்லை என பதில் கொடுத்துள்ளார்.

lakshmi-menon-badword-cinemapettai
தமிழ் சினிமாவில் லட்சுமிமேனன், நடிகர் விஷாலுடன் அடிக்கடி கிசுகிசுக்கப்பட்டார் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்.
