லட்சமிமேனன், வேதாளம் படத்திற்கு பிறகு விஜயசேதுபதியுடன் நடித்துள்ள றெக்க படம் மறுபடியும் தனது மார்க்கெட்டை உயர்த்தும் என்று எதிர்பார்ப்பில் உள்ளார், அதற்கடுத்து ஜீவாவுடன் ஜெமினிகணேசன் படத்தில் கமிட்டாகியிருக்கிறார்.

இந்த நிலையில், விக்ரமை பிரபுவை வைத்து கும்கி-2 படத்தை பிரபுசாலமன் இயக்கப்போகிற செய்திகள் வெளியானதை அடுத்து அந்தபடத்தில் லட்சுமிமேனன் இருக்கிறாரா? என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.

அதிகம் படித்தவை:  வெளியானது இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ள விக்ரம் பிரபுவின் "அசுரகுரு" பர்ஸ்ட் லுக் போஸ்டர்.

ஆனால் அதுகுறித்து அவரைக்கேட்டால், கும்கி படம் எனக்கு தமிழில் நல்ல தொரு என்ட்ரியாக அமைந்தது. அந்த வாய்ப்பைக்கொடுத்த பிரபுசாலமனை மறக்க முடியாது. இப்போது கும்கி-2 படத்தை அவர் இயக்கப்போவதாக கேள்விப்பட்டேன். ஆனால் அந்த படம் குறித்து என்னிடம் இதுவரை பேசவில்லை. இருப்பினும் அந்த படத்திலும் வாய்ப்பு கிடைத்தால் சந்தோசப்படுவேன் என்கிறார் லட்சுமிமேனன்