Tamil Cinema News | சினிமா செய்திகள்
3 வருஷம் அவருடன் தொடர்பில் இருந்தீர்களா எனக் கேட்ட ரசிகர்.? லட்சுமி மேனன் பதிலால் ஷாக்கான கோலிவுட்
சுந்தரபாண்டியன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் லட்சுமி மேனன். இந்தப் படம் மிகப் பெரிய வரவேற்பை பெற்று 100 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. அடுத்ததாக வெளியான கும்கி திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது.
அதனால் தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் லட்சுமி மேனன் கொடிகட்டி பறந்தார். ஆனால் அதன்பிறகு இவர் சரியான கதைகளை தேர்ந்தெடுக்கததால் ஒரு சில படங்கள் தோல்வியடைய அதன் பிறகு பெரிய அளவில் பட வாய்ப்புகள் கிடைக்காமல் தடுமாறினார்.
இவரது நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் புலிகுத்தி பாண்டி. இப்படம் நேரடியாக சன்டிவி ஒளிபரப்பாகி டிஆர்பியில் முதலிடத்தை பிடித்தது. தற்போது ஒரு சில பட வாய்ப்புகள் கையில் வைத்துள்ளார் லக்ஷ்மிமேனன்.

lakshmi menon
சமீபகாலமாக நடிகைகள் பலரும் சமூக வலைதள பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வருகின்றனர். தற்போது லட்சுமிமேனன் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்வி விளையாட்டை விளையாடியுள்ளார்.
அதில் நீங்கள் லாங் ரிலேஷன்ஷிப்லிருந்து உள்ளீர்களா என கேட்கப்பட்டது. அதற்கு இருந்துள்ளேன் என பதிலளித்துள்ளார். அடுத்ததாக நீங்கள் 3 வருடமாக தொடர்பில் இருந்துள்ளீர்களா என கேள்வி கேட்டதற்கு அதற்கும் இருந்துள்ளேன் என பதிலளித்துள்ளார்.
தற்போது இந்த கேள்வி பதிலளித்ததிலிருந்து பலரும் லட்சுமி மேனன் 3 வருடமாக யாரை காதலதிருப்பார், அது யாராக இருக்குமென சமூக வலைதளங்களில் தேடி வருகின்றனர்.
