ரொமான்ஸில் பின்னி பெடலெடுக்கும் பாரதிகண்ணம்மா.. இன்னும் என்னென்ன கொடுமையை பாக்கணுமோ

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாரதிகண்ணம்மா தொடரில் லட்சுமிக்கு தன் அப்பா பாரதி தான் என்று தெரிந்த வந்த நிலையில் பல சுவாரசியமான காட்சிகள் தொடரில் அரங்கேறி வருகிறது. அதுமட்டுமல்லாமல் லட்சுமியின் நடவடிக்கையால் கண்ணம்மாவுக்கு சந்தேகமும் வருகிறது.

இன்றைய எபிசோடில் லட்சுமி மற்றும் ஹேமா ஸ்கூலில் பெற்றோர்களுடன் குழந்தைகளை பிக்னிக் அழைத்து செல்கிறார்கள். இதனால் பஸ்ஸில் குழந்தைகள் அவர்களுடைய பெற்றோர்கள் மற்றும் இவர்களுடன் பாரதி, கண்ணம்மா இருவரும் செல்கிறார்கள்.

முதலில் ஹேமா மற்றும் லட்சுமி இருவரும் பாட்டுக்கு டான்ஸ் ஆடுகிறார்கள். மேலும் லக்ஷ்மி, கண்ணம்மாவை பாரதியுடன் நெருங்கிப் பழக வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பாரதி பக்கத்தில் உட்கார சொல்கிறாள். இந்நிலையில் எதர்ச்சியாக கண்ணம்மா, பாரதி மேல் விழுகிறாள்.

ஒருபக்கம் சௌந்தர்யாவுக்கு யாரென்று சொல்லாமல் பல மெசேஜ்கள் வந்து கொண்டிருக்கிறது. இது யார் என்று தெரியாமல் மிகுந்த குழப்பத்தில் உள்ளார் சௌந்தர்யா. இந்நிலையில் கண்ணம்மா, லட்சுமி அழைத்து பாரதியை ஏன் டாக்டர் அப்பா என்று கூப்பிடுற என கேட்கிறார்.

அதற்கு லட்சுமி சாதுரியமாக உன்னை ஹேமா சமையல் அம்மானு கூப்பிடுற மாதிரி நான் ஹேமா அப்பாவை டாக்டர் அப்பானு கூப்பிடுறேன். மேலும், இனிமே நான் அப்பாவ தேட மாட்டேன் என லட்சுமி கூறுகிறாள். இதைக்கேட்டு கண்ணம்மா அதிர்ச்சி அடைகிறாள். ஸ்கூலில் ஒரு ஃபார்ம் கொடுத்து அதில் பெற்றோர் பெயர்களை எழுத சொல்கிறார்கள்.

உடனே லட்சுமி அதில் தந்தை பெயர் உள்ள இடத்தில் பாரதி என எழுதுகிறாள். ஏண்டி அப்பா பேரு பாரதியின் எழுதுற என கண்ணம்மா கேட்க, நீதான் அப்பா பேருண பாரதியின் ஒரு தடவை சொன்னா என லட்சுமி கூறுகிறாள். இதைக் கேட்ட கண்ணம்மா லட்சுமிக்கு உண்மை தெரிந்து இருக்குமா என்ற சந்தேகத்தில் உள்ளார். தெரிந்திருந்தால் இவ்வளவு அமைதியாக இருக்க மாட்டாளே என்ற குழப்பத்திலும் கண்ணம்மா உள்ளார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்