Tamil Cinema News | சினிமா செய்திகள்
கன்னக்குழி அழகி லைலாவின் குடும்ப புகைப்படம்.. வயதான தோற்றத்தில் கணவனை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்
தமிழ் சினிமாவின் பொற்காலம் என்று அழைக்கப்படும் 90களில் அறிமுகமான நடிகைகளில், நடிகை லைலாவும் ஒருவர். எப்பொழுதும் சிரித்த முகம் கன்னக்குழி அழகு துறுதுறுப்பான நடிப்பு, கவர்ச்சி காட்டாத கண்ணியமான கதாபாத்திரங்கள் என தமிழ் ரசிகர்களை மட்டுமல்லாமல் இந்தி, மலையாளம், தெலுங்கு என அனைத்து மொழி ரசிகர்களையும் கவர்ந்தவர்.
விஜயகாந்த் நடிப்பில் கள்ளழகர் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை லைலா. தமிழ் படங்களில் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை இன்று வரை தக்க வைத்துள்ளார்.
பல வெற்றித் படங்களில் நடித்திருக்கும் லைலா சிறந்த நடிகைக்காக பல விருதுகளை வென்றுள்ளார். பிதாமகனில் இவர் நடித்த கதாபாத்திரம் அனைவரையும் ரசிக்க வைத்ததோடு அதில் இவரின் நடிப்பு இன்றும் பேசப்பட்டு வருகிறது.
தீனா, முதல்வன், ரோஜாவனம், உன்னை நினைத்து, பார்த்தேன் ரசித்தேன், அள்ளித்தந்த வானம்,நந்தா போன்ற வெற்றிப்படங்களில் நடித்து பெயர் பெற்றவர். இவர் திருமணத்திற்குப் பிறகு படங்களில் நடிப்பதை முற்றிலும் நிறுத்திவிட்டார்.
திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து சற்று விலகி இருக்கும் லைலா இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த இவரது ரசிகர்கள் அசந்து போன நிலையில் இப்போது தமிழ் திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார் எனவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
இன்று வரையிலும் இவரது இடத்தை நிரப்ப முடியாத உயரத்தை எட்டி இருக்கும் லைலாவை, மீண்டும் ரசிகர்களை திரையில் காண ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றன.

laila-family
