fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

குஷ்புக்கு அடுத்தப்படியாக சிக்கிய லேடி சூப்பர் ஸ்டார்.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய பாஜக!

kushboo-1

India | இந்தியா

குஷ்புக்கு அடுத்தப்படியாக சிக்கிய லேடி சூப்பர் ஸ்டார்.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய பாஜக!

தேசிய கட்சிகளில் ஒன்றான பாஜக தனது கட்சிக்கு கூடுதல் வலு சேர்ப்பதற்காக பல முக்கிய பிரபலங்களுக்கு தூண்டில் போட்டு வருகிறது. அதில் சிலர் சிக்கிக் கொள்கின்றனர், பலர் எஸ்கேப் ஆகி விடுகின்றனர்.

அந்தவகையில் கடந்த அக்டோபரில் நடிகர் குஷ்பூ காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, பாஜகவில் இணைந்து பெரும் அதிருப்தியை ஏற்படுத்தினார். தற்போது குஷ்புவிற்கு விதிவிலக்காக லேடி சூப்பர் ஸ்டாராக 80-களில் சினிமாவையே கலக்கி கொண்டிருந்த நடிகை விஜயசாந்தி, இன்று உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் இணைய உள்ளார்.

மேலும் தென்னிந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டார் விஜயசாந்தி. 2004-ல் அரசியலில் சேர்வதற்கு முன்பு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் 186 திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ஏற்கனவே விஜயசாந்தி பாஜகவில் இருந்து, டிஆர்எஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு தாவினார். அதன் பின் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாக கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ராஜினாமா செய்துள்ளார்.

எனவே சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்த முன்னாள் எம்.பி.யுமான விஜயசாந்தி, இன்று பாஜகவில் இணையப் போகின்ற தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரிதும் பேசப்படுகிறது.

vijayasanthi-cinemapettai

vijayasanthi-cinemapettai

ஆகையால் அரசியலைப் பொறுத்தவரை ஒரு கட்சியில் இருந்து இன்னொரு கட்சிக்கு தாவுவது என்பது அதிசயம் அல்ல. ஆனால் பாஜக விரித்த வலையில் குஷ்பூ, விஜயசாந்தியை போல் இன்னும் யார் யார் சிக்க போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top