Connect with us
Cinemapettai

Cinemapettai

jyothika-keerthy-suresh-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கீர்த்தி சுரேஷ், ஜோதிகாவை தொடர்ந்து பிரபல நடிகையின் படமும் OTT-யில் ரிலீஸ்.. அப்போ ரிசல்ட் இப்பவே சொல்லிடலாம்

தற்போது கொரோனா பொது முடக்கத்தான் திரையரங்குகள் மூடப்பட்டிருக்கும் இந்த சூழலில், பல முன்னணி பிரபலங்களின் படங்களும் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகி வருகிறது.

ஏற்கனவே கதாநாயகிகளை மையப்படுத்தி உருவான அனுஷ்காவின் ‘நிஷாபதம்’, ஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தால்’ மற்றும் கீர்த்தி சுரேஷின் ‘பென்குயின்’ படமும் ரிலீசாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த COVID19 காலங்களில் நேரடி வெளியீட்டிற்கு டிஜிட்டல் தளத்தை தேர்வு செய்த கதாநாயகியை மையப்படுத்தி படம்.

தற்போது 4வது படமாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் ‘மூக்குத்தி அம்மன்’ படமும் OTT தளத்தில் ரிலீஸ் செய்யப்படும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இந்த வருடம் மே மாதத்திலேயே திரையரங்கில் வெளியிட திட்டமிட்ட படக்குழு ஏமாற்றத்தை சந்தித்து தற்போது டிஸ்னி ஹாட்ஸ்டார் மூலம் இந்த வருட தீபாவளிக்கு திரையிட தயாராகிவிட்டது.

மேலும் இந்த படம் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

nayanthara-amman

nayanthara-amman

இந்த தகவல் ரசிகர்களுக்கும் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை தந்தாலும், கூட OOT-யில் வெளிவந்த பெண்களை மையப்படுத்தி எந்த படமும் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை.

அதாவது நகரங்களை மட்டுமே டார்கெட் செய்யும் OOT தளத்தில் எந்த அளவுக்கு வெற்றி பெறும் என்பதில் உண்மை இல்லை. இதனால் மூக்குத்தி அம்மன் ரிசல்ட் இப்போதே தெரிந்துவிட்டதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Continue Reading
To Top