சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

அம்பானி குழுமத்துடன் கைகோர்த்த நயன்தாரா.. என்ன ஒரு புத்திசாலித்தனம், குவியும் வாழ்த்து

ரஜினி, விஜய், அஜித், சிரஞ்சீவி என தென்னிந்திய டாப் ஸ்டார்களுடன் இணைந்து நடித்த நயன்தாராவை லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்கள் அழைக்கிறார்கள். கடந்தாண்டு அட்லீ இயக்கத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நயன்தாரா நடித்து அசத்தியிருந்தார். இப்படம் உலகம் முழுவதும் உள்ள தியேட்டர்களில் வெளியாகி பாக்ஸ் ஆபீசில் ரூ.1000 கோடி வசூலித்தது.

இந்த நிலையில், தமிழ், மலையாளம், தெலுங்கு சினிமாவில் கோலோச்சி வந்த நயன்தாரா ஜவான் பட வெற்றியின் மூலம் பாலிவுட்டிலும் கால் பதித்துள்ளார். அட்லீ – சல்மான் கான் இணையும் புதிய இந்திப் படத்திலும் இன்னும் முன்னணி இயக்குனர்கள் படத்திலும் நயன்தாரா நடிக்க வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்ட நயன் தாரா தனது இரட்டை குழந்தைகளைக் கவனித்து வருவதுடன், சொந்தமான தொழிலும் செய்து வருகிறார். அதன்படி டீ விற்பனை, நாப்கின் நிறுவனம், காஸ்மெடிக்ஸ் என பலதுறைகளில் புத்திசாலித்தனமாக அவர் முதலீடு செய்துள்ளார்.

அழகு சாதனப் பொருட்கள் விற்பனை

இந்த நிலையில், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி நடத்தும் நிறுவனத்தின் மூலம் தனது 9 Skin என்ற அழகு சாதனைப் பொருட்களை விற்பனை செய்ய சமீபத்தில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருப்பதாக தகவல் வெளியாகிறது.

nayanthara- 9skin
nayanthara- 9skin

அம்பானியின் நிறுவனம் எல்லோருக்கும் தெரிந்தது. அதே சமயம் சந்தையிலும் ரீடெயில் முதற்கொண்டு, டிஜிட்டல் வர்த்தகம். ஆன்லைன் ஸ்டோர் என அனைத்திலும் முன்னணியில் உள்ள நிலையில், நயன்தாராவின் டீ, நாப்கின் ஆகியவை இன்னும் சில நாட்களில் ஆன்லைன் பரிவர்த்தனைகள் மூலம் வாடிக்கையாளர்களுக்கும் எளிதாக கிடைக்கலாம் என தெரிகிறது.

எனவே சினிமாவில் மட்டும் இருக்காது நடிப்பில் பீக்கில் இருக்கும்போதே தொழிலில் முதலீடு செய்து லாபம் பார்த்து வரும் நயன்தாராவை பலரும் பாராட்டி வருகின்றனர். நயன்தாரா அடுத்து, கவின் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். இப்படத்திற்கு ஹாய் என்று பெயரிட்டுள்ளனர். இப்படத்தின் ஷுட்டிங் அடுத்தாண்டு தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Trending News