lady-murdered-in-didigul
lady-murdered-in-didigul

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் இச்சம்பவம் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் அருகிலுள்ள சொட்ட மாயனூர் எனும் ஊரில் கணேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவிதான் மஞ்சுளா. இந்த பெண்மணிக்கு 43 வயதாகிறது. கணேசனும் மஞ்சுளாவும் வட்டி தொழில் செய்து, வசூல் செய்வது இவர்களின் வேலையாகும்.

இந்நிலையில் திண்டுக்கல் சென்றுவிட்டு வீட்டுக்கு செல்வதற்காக ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். திருக்கண் பஸ் ஸ்டாப்பில் இறங்கி நடந்து கொண்டிருந்த மஞ்சுளவை காரில் வந்த சில மர்ம நபர்கள் அரிவாள் கத்தியுடன் சுற்றி கொண்டனர். அதிர்ச்சி அடைந்த மஞ்சுளா நடுரோட்டில் ஓடத் தொடங்கினார். ஒரு கட்டத்திற்கு அப்புறம் அவரால்  ஓடமுடியாமல் இருந்ததால் மர்ம நபர்கள் கத்தியால் அவரை சரமாரியாக நடுரோட்டில் தாக்கினர். சம்பவ இடத்திலேயே மஞ்சுளா மரணம் அடைந்தார்.

ஊர் பொதுமக்கள் மற்றும் மஞ்சுளாவின் சொந்தக்காரர்கள் கொலையாளிகளை கைது செய்யுமாறு திண்டுக்கல் – கரூர் சாலையில் உள்ள திருக்கண் பஸ்ஸ்டாப்பில் நடுரோட்டில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் அங்கு சில மணி நேரம் பரபரப்பாக இருந்தது. இச்சம்பவத்தை கேள்விப்பட்ட வடமதுரை போலீசார்  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலையில் ஈடுபட்ட நபர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் அந்த பேச்சுவார்த்தை சுமுகமாக முடியாததால் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் போலீசார் மோப்ப நாயுடன் கொலையாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அதிகம் படித்தவை:  கூடவே இருந்தியே செவ்வாழ இப்படி அடிச்சிட்டியே.. நகைக்கடையில் 75 லட்சம் கொள்ளை