கனடாவை ஒட்டிய சாபிள் தீவில் Zoe Lucas என்னும் பெண் கடந்த நாற்பது வருடங்களாக தனிமையில் வசித்து வருகிறார்.

இயற்கை ஆய்வாளரான இவர் தனது 21ம் வயதில் முதன் முதலில் இத்தீவிற்கு வந்துள்ளார். இங்கு இருக்கும் இயற்கை பிடித்துப்போக அங்கேயே தங்கிவிட்டார்.

இவர் தங்கி இருக்கும் வீடு மரத்தினாலானது. இத்தீவிற்குள் நுழைய வானூர்தி அல்லது கப்பல் இரு வழிகளே சாத்தியம்.

இத்தனை வருடம் தனியே எப்படி வாழ முடிந்தது என்ற கேள்விக்கு “இங்கு நான் தனித்து இல்லை என்னுடன் 400 குதிரைகள் 3 லட்சம் சீல்கள், 350 வகையான பறவைகள் துணைக்கு உள்ளன. மேலும் அமைதியான இந்த இயற்கை என்னை எங்கும் செல்லவிடாமல் பிடித்து வைத்துள்ளது.” என்கிறார்.

எப்போதாவது இவர் தனது சொந்த நாட்டிற்கு சென்று வருகிறார். எப்போதும் கையில் ஒரு குறிப்பேடு, பைனாகுலர் மற்றும் தண்ணீர் குடுவை வைத்துக்கொண்டு தீவினை வலம் வருகிறார்.

தீவிர குதிரை பிரியரான இவரது வீட்டில் நிறைய குதிரையின் மண்டை ஓடுகள் உள்ளன. அதனை கொண்டு குதிரையின் குணாதிசயங்களை ஆராய்ச்சி செய்து வருகிறாராம்.

இந்த குதிரைகள் இத்தீவிற்கு 18 நுற்றாண்டில் கொண்டு வரப்பட்டவையாம்.

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: நம்ம ஊர்ல 20 வருசமா பொண்டாட்டிய இருட்டு ரூம்ல பூட்டி வைச்ச கேஸ்தான் கேள்வி பற்றுக்கோம். நம்ம ஊர் கொடுமைக்கு இந்த தீவு எவ்வளவோ தேவலை. பிக் பாஸ் அடுத்த சீசன்க்கு இந்த பாட்டிய பார்த்து வைச்சுகுங்க…