செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் லிஸ்டில் நான் இல்லை.. லப்பர் பந்து இயக்குனர் பகிர்ந்த அதிரடி கருத்து

TamizharasanPachamuthu: தமிழ் சினிமா இன்னும் நல்ல கதைகளை நம்பியே ஏங்கிக் கொண்டிருக்கிறது என்பதை இன்னொரு முறை நிரூபித்து இருக்கிறது லப்பர் பந்து படம். அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த இந்த படத்தை இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கி இருந்தார்.

கிரிக்கெட், ஈகோ, யதார்த்தமான நடிப்பு, கேப்டன் விஜயகாந்த் என இந்த படத்துக்கு ஏகப்பட்ட பாசிட்டிவ் நிறைந்திருக்கிறது. இந்த வருடத்தில் ரிலீசான சிறந்த படங்களின் லிஸ்டில் தற்போது லப்பர் பந்தும் இணைந்திருக்கிறது.

இந்த படத்தின் கதை நகர்ந்திருக்கும் விதம் இயக்குனர்கள் மாரி செல்வராஜ் மற்றும் பா ரஞ்சித் இருவரின் கதை களத்துடன் ஒப்பிட்டு இருப்பதாக நிறைய பேர் விமர்சனம் செய்திருக்கிறார்கள். இந்த கருத்துக்கு இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து விளக்கம் கொடுத்திருக்கிறார்.

லப்பர் பந்து இயக்குனர் பகிர்ந்த அதிரடி கருத்து

அதாவது, மாரி செல்வராஜ் மற்றும் இயக்குனர் பா ரஞ்சித் போன்றவர்கள் இது போன்ற சாதிய பாகுபாட்டால் நிறைய அழுத்தங்களை சந்தித்தவர்கள். அதனால் அவர்களுடைய படங்களில் ஒரு குமுறல் இருக்கும். ஆனால் நான் அப்படி எந்த ஒரு தாக்கத்தையும் சந்தித்தது இல்லை.

நான் என் படத்தில் வைத்த காட்சிகள் எல்லாம் நான் பார்த்து நடந்த விஷயங்கள். இதுபோன்ற அழுத்தங்களை நான் வேடிக்கை மட்டும் தான் பார்த்திருக்கிறேன். அதனால் தான் என் கதையில் இது போன்ற விஷயங்களை நான் ரொம்ப அழுத்தமாக சொல்லவில்லை என சொல்லி இருக்கிறார்.

இயக்குனர்கள் பா ரஞ்சித் மற்றும் மாரி செல்வராஜ் இருவர் மீதும் சாதிய வேறுபாடுகள் மற்றும் அழுத்தங்களை இவர்களுடைய படங்கள் அதிகமாக எடுத்துரைப்பதாக ஒரு சில இயக்குனர்களிடமிருந்து நெகடிவ் விமர்சனங்கள் வந்து இருக்கிறது.

அதை எல்லாம் தாண்டி நான் சந்தித்த பிரச்சனையை பற்றி நான் படம் எடுக்கிறேன், என்னை சார்ந்த மக்களைப் பற்றி நான் மக்களுக்கு தெரியப்படுத்துகிறேன் என்ற ஒரு நோக்கத்தில் இந்த இருவரும் ஒரே பாதையில் பயணிக்கிறார்கள்.

சமீபத்தில் ரிலீஸ் ஆன லப்பர் பந்து படமும் இதே கதைகளத்தை பேசியிருந்ததால் தான் தமிழரசன் பச்சை முத்துவும் அடுத்தடுத்து இது போன்ற கதைகளத்தில்தான் படம் எடுக்கப் போகிறார், இந்த இரண்டு இயக்குனர்களின் லிஸ்டில் அவர் இணைந்து விட்டார் என முடிவு கட்டப்பட்டது. இதை தெரிந்து கொண்டு முன்னமே உஷாராகி இப்படி ஒரு விளக்கத்தை கொடுத்து விட்டார் இந்த வெற்றி இயக்குனர்.

வசூலைக் குவிக்கும் லப்பர் பந்து

- Advertisement -

Trending News