Connect with us
Cinemapettai

Cinemapettai

எஸ்பி ஜனநாதனின் லாபம் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு.. புரட்சிகரமான போஸ்டர் வெளியீடு

laabam-cinemapettai-01

Tamil Cinema News | சினிமா செய்திகள்

எஸ்பி ஜனநாதனின் லாபம் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு.. புரட்சிகரமான போஸ்டர் வெளியீடு

விஜய் சேதுபதி நடிப்பில் எஸ்.பி ஜனநாதன் இயக்கிய படம் லாபம். ஷ்ருதி ஹாசன் ஹீரோயினாக நடிக்கிறார். தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு வில்லன் வேடத்தில் நடிக்கிறார். ராம்ஜி ஒளிப்பதிவு, டி இமான் இசை.

மேலும் இப்படத்தில் சாய் தன்ஷிகா, ஹரிஷ் உத்தமன், கலையரசன் ஆகியோரும் நடிக்கின்றனர். விஜய் சேதுபதியும், அவரது நண்பர் ஆறுமுககுமாரும் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.

கையில் மைக்கும் ஒரு தோளில் ஒலிப்பெருக்கியுமாக குரல் எழுப்பிக் கொண்டிருக்கிறார் விஜய் சேதுபதி. பேக் ட்ராப்பில் ஓவியர் சந்துருவின் சிலைகள் உள்ளது. துப்பாக்கியுடன் குறி பார்க்கும் ஒருவன், ஏர்கலப்பையுடன் விவசாயி, குழந்தையுடன் போராடும் பெண், ஆவேசமாக கோஷம் போடும் மாணவி என ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரே படுபயங்கரமாக வெளியானது.

அரச பயங்கரவாதத்துக்கு எதிராக போராடும் மக்கள் மற்றும் அதனை அடக்குபவன் என அனைவரையும் குடிமக்களே என சொல்லாமல் சொல்லியுள்ளார் இயக்குனர் எஸ் பி ஜனநாதன்.

லாபம் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் நடந்து கொண்டிருக்கும் போது திடீரென உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையிலேயே பரிதாபமாக இறந்தார் எஸ்பி ஜனநாதன்.

அதனைத் தொடர்ந்து படம் என்ன ஆகும் என்பது கேள்விக்குறியானது. இருந்தாலும் விஜய் சேதுபதி திட்டமிட்டபடி இந்த படம் வெளியாகும் என தெரிவித்திருந்தார். அதன்படி வருகிற செப்டம்பர் 9 ஆம் தேதி லாபம் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

laabam-cinemapettai

laabam-cinemapettai

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top