அமெரிக்காவில் நடந்த கோல்டன் குளோப் விருது விழாவில் லா லா லேண்ட் படம் அதிகப்பட்சமாக 7 விருதுகளை குவித்து சாதனை படைத்தது. கோல்டன் குளோப்பில் ஒருபடம் 7 விருதுகள் வாங்குவது இதுவே முதல்முறையாகும்.

சிறந்த வெளிநாட்டு திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு ஆண்டுதோறும் கோல்டன் குளோப் விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 74-வது கோல்டன் குளோப் விருது வழங்கும் நிகழ்ச்சி அமெரிக்காவின் கலிஃபோர்னியா நகரில் நடைபெற்றது. இதில் பல்வேறு திரைப்படங்களும், தொலைக்காட்சி தொடர்களும் போட்டி போட்டன. இதில் சிறந்த திரைப்படமாக ‛மூன்லைட்’ படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதேப்போன்று சிறந்த காமெடி மற்றும் மியூசிக் படமாக ‛லா லா லேண்ட்’ படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

‛மான்செஸ்டர் பை தி சி’ என்ற படத்தில் நடித்தற்காக சிறந்த நடிகருக்கான விருதை காஸே அஃப்லெக் என்பவரும், எலே படத்திற்காக சிறந்த நடிகையாக இசபெல்லா ஹாப்பர்ட்டும் தட்டி சென்றனர்.

7 விருதுகளை குவித்த லா லா லேண்ட் : கோல்டன் குளோப் வரலாற்றிலேயே முதன்முறையாக ‛லா லா லேண்ட்’ 7 விருதுகளை பெற்று சாதனை படைத்தது. சிறந்த காமெடி படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த திரைக்கதை, சிறந்த இசை மற்றும் சிறந்த பாடல் என 7 பிரிவுகளில் இப்படம் விருது பெற்றது.

கோல்டன் குளோப் விருதுகள் விபரம் வருமாறு…

சிறந்த படம்(சமூக அக்கறை) – மூன்லைட்

சிறந்த காமெடி படம் – லா லா லேண்ட்

சிறந்த இயக்குநர் – டேமின் சாலே (லா லா லேண்ட்)

சிறந்த நடிகர்(காமெடி) – ரேயான் காஸ்லிங் (லா லா லேண்ட்)

சிறந்த நடிகை(காமெடி) – எமா ஸ்டோன்(லா லா லேண்ட்)

சிறந்த நடிகர் (சமூகம்) – காஸே அஃப்லெக் (மான்செஸ்டர் பை தி சி)

சிறந்த நடிகை – இசபெல்லா ஹாப்பர்ட் (எலே)

சிறந்த துணை நடிகை – வியோலா டேவிஸ் (பென்சஸ்)

சிறந்த துணை நடிகர் – ஆரோன் டெய்லர் ஜான்சன் (நாக்டர்னல் அனிமல்ஸ்)

சிறந்த திரைக்கதை – டேமின் சாலே (லா லா லேண்ட்)

சிறந்த இசை – ஜஸ்டின் ஹர்விட்ஸ் (லா லா லேண்ட்)

சிறந்த பாடல் – சிட்டி ஆப் ஸ்டார்ஸ் பாடல் (லா லா லேண்ட்)

சிறந்த அனிமேஷன் படம் – ஜூடோபியா

சிறந்த வெளிநாட்டு படம் – எலே

தொலைக்காட்சி விருது விபரம்…

சிறந்த தொலைக்காட்சி தொடர் – அட்லாண்டா

சிறந்த தொலைக்காட்சி தொடர்(சமூகம்) – தி கிரவுன்

சிறந்த தொலைக்காட்சி நடிகர் – டோனால்டு குளோவர் (அட்லாண்டா)

சிறந்த தொலைக்காட்சி நடிகர் (சமூகம்) – பில்லி மாப் (கோலியாத்)

சிறந்த தொலைக்காட்சி நடிகை – டிரேஸி எல்லி ரோஸ் (பிளாக் இஷ்)

சிறந்த தொலைக்காட்சி நடிகை (சமூகம்) – கிலாரி பாய் (தி கிரவுன்)