Connect with us
Cinemapettai

Cinemapettai

Sports | விளையாட்டு

லாரா, கெயில் வரிசையில் மேற்கிந்திய தீவு வீரர் ரெடி! ஆடிய ருத்ரதாண்டவத்தில் சுருண்டது பங்களாதேஷ்

மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் டீம், பங்களாதேஷில் சுற்றுப்பயணம் செய்வது நாம் அறிந்ததே. இரு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி சாட்டுகிறோம் நகரில் நடந்து வருகின்றது.

டாஸ் வென்று முதலில் பேட் செய்த வங்கதேச அணி 150.2 ஓவா்களில் 430 ரன்கள் குவித்தது. மெஹிதி ஹசன் மிராஸ் 168 பந்துகளில் 13 பவுண்டரிகளுடன் 103 ரன்களும், ஷகிப் அல்ஹசன் 68 ரன்களும், ஷத்மான் இஸ்லாம் 59 ரன்களும் குவித்தனா். மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ஜோமெல் வாரிகன் 4 விக்கெட்டுகளை சாய்த்தாா்.

பின்னா் முதல் இன்னிங்ஸை ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 3-ஆவது நாளான வெள்ளிக்கிழமை 96.1 ஓவா்களில் 259 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் கேப்டன் கிரேக் பிரத்வெயிட் 76, ஜொ்மைன் பிளாக்வுட் 68, சில்வா 42 , மற்றும் கைல் மேயர்ஸ் 40 ரன்கள் சோ்த்தனா்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 171 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில், 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய வங்கதேச அணி 67.5 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் எடுத்து டிக்ளோ் செய்தது. அந்த அணியில் கேப்டன் மோமினுல் ஹக் 115 ரன்களும், லிட்டன் தாஸ் 69 ரன்களும் குவித்தனா்.

இதையடுத்து 395 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி நேற்று ஆட்டநேர முடிவில் 40 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் எடுத்துள்ளது. க்ருமா போனா் 15, கைல் மேயா் 37 ரன்களுடன் களத்தில் உள்ளனா்.கடைசி நாள் ஆட்டம் இன்று.

அசத்தலாக இந்த ஜோடி பார்ட்னெர்ஷிப் போட்டது. போனா் 86 ரங்களில் ஆட்டம் இழந்தார். எனினும் நின்று ஆடி, 310 பந்துகளில் 210 ரன்கள் எடுத்து நாட் அவுட் ஆக இருந்தார் மேயர்ஸ். 20 பௌண்டரி மற்றும் 7 சிக்ஸர்கள் அடக்கம்.

பல சீனியர் வீரர்கள் பல்வேறு கரணம் சொல்லி விலகியதால் தான் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. வெஸ்ட் இண்டீஸ் டீம் சார்பில் அறிமுக போட்டியில், அதுவும் நான்காவது இன்னிங்ஸில் இரட்டை சதம் அடித்து சந்தித்துள்ளார் 28 வயதே ஆன இடது கை பேட்ஸ்மேன் மேயர்ஸ். முதல் இன்னிங்சில் 70 பந்துகளில் 7 பௌண்டரி அடித்து 40 ரன்கள் குவித்தார். ஆட்டநாயகன் விருதையும் தட்டி சென்றுள்ளார்.

kyle meyers

வங்காளதேசத்தில் இவர் படைத்த சாதனையை இவரின் பார்படாஸ் நகரில் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

Continue Reading
To Top