இந்தூர்: மும்பை அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில், பிளான் பண்ணி பக்காவா செயல்பட்ட பஞ்சாப் அணி 20 ஓவரில், 4 விக்கெட்டுக்கு 198 ரன்கள் எடுத்தது.

இந்தியாவில் நடக்கும் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான ஐபிஎல் தொடர், 10வது ஆண்டாக வெற்றிகரமாக துவங்கி நடந்து வருகிறது. இதில் ஐதராபாத்தில் நடந்த 22வது லீக் போட்டியில், மும்பை, பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இதில் ’டாஸ்’ வென்ற மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா முதலில் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார். மும்பை அணியில் எந்த மாற்றமும் இல்லை.

ஆம்லா அபாரம்:
இதையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு, துவக்க வீரர் ஷான் மார்ஷ் (26) ஓரளவு கைகொடுத்தார். அடுத்து வந்த சகா (11) ஏமாற்றினார். ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும், கொஞ்சம் கூட சலைக்காத ஆம்லா, தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

மின்னல் வேக மேக்ஸ்வெல்:
பின் வந்த கேப்டன் மேக்ஸ்வெல், மின்னல் வேகத்தில் ரன்கள் சேர்த்தார். 18 பந்தில் 4 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 40 ரன்கள் எடுத்து அவுட்டானார். பின் வந்த ஸ்டோனிஸ் (1) நிலைக்கவில்லை.

அதிகம் படித்தவை:  கடைசி ஓவரில் பஞ்சாப் அணி அசத்தல் வெற்றி

அக்‌ஷர் கம்பெனி:
தொடர்ந்து எதிர்முனையில் அசராமல் அதிரடியாக ரன்கள் சேர்த்த ஆம்லா, மலிங்கா வீசிய கடைசி ஓவரில் தொடர்ந்து இரண்டு சிக்சர்கள் பறக்கவிட்டு, டி-20 அரங்கில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். இதையடுத்து பஞ்சாப் அணி , 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 198 ரன்கள் எடுத்தது. ஆம்லா (104), அக்‌ஷர் படேல் () அவுட்டாகாமல் இருந்தனர்.

மும்பை அணி சார்பில் மெக்லீனகன் அதிகபட்சமாக 2 விக்கெட் கைப்பற்றினார்.

அதிகம் படித்தவை:  "என்னை ஏலத்தில் எடுத்து ஐபில்- ஐ காப்பாற்றி விட்டார் சேவாக்" - கிறிஸ் கெயில் அதிரடி பேச்சு !

நிரூபித்த பஞ்சாப்:
இதுவரை இம்மைதானத்தில் நடந்துள்ள போட்டிகளில், 36 சிக்சர்களும், 39 பவுண்டரிகளையும் பேட்ஸ்மேன்கள் பறக்கவிட்டுள்ளனர். சிறிய மைதானமான இந்தூர் மைதானத்தை சிக்சர் களம் என்பதை இன்று பஞ்சாப் அணி நிரூபித்தது. ஆம்லா (6), மேக்ஸ்வெல் (3) சேர்ந்து மொத்தமாக 9 சிக்சர்கள் பறக்கவிட்டனர்.