kings-xi-punjab_Cinemapettai

ராஜ்கோட் : பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி வரை போராடியும் குஜராத் அணிக்கு பலன் கிடைக்காமல் போனது.

10வது சீசன் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைப்பெற்று வருகின்றது. இதன் 26 போட்டியில் குஜராத் லயன்ஸ் அணிக்கும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும் இடையே ராஜ்கோட்டில் நடைப்பெற்றது.

இதில் டாஸ் வென்ற குஜராத் அணியின் ரெய்னா முதலில் பவுலிங் செய்ய தீர்மானித்தார்.
இதையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு ஹசிம் ஆம்லா 65 ரன்கள், ஷான் மார்ஷ் 30 ரன்கள், 31 ரன்கள் அக்ஸர் படேல் 34 ரன்கள் எடுத்தார். 20ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 188 ரன்கள் குவித்தது.

அதிகம் படித்தவை:  ஒன்றா? மூன்றா? இந்தியாவை விடாமல் துரத்தும் ஆஸ்திரேலியா! இன்று நடக்கும் போட்டியில் முடிவு தெரியும்..

சொதப்பிய குஜராத்:
தொடர்ந்து களமிறங்கிய குஜராத் அணிக்கு தொடக்கமே படு சொதப்பலாக இருந்தது. மெக்கல்லம் 6, பின்ச் 13 ரன்களில் அடுத்தடுத்து அவுட்டாகினர்.

தொடர்ந்து வந்த ரெய்னா 32 ரன்கள் எடுத்து சிறிது நேரம் தாக்குபிடித்தார். பின் வரிசை வீரர்களான ஜடேஜா 9, டுவைன் ஸ்மித் 4, அக்‌ஷ்தீப் நாத் 0, ஆண்ட்ரீவ் டை 22 ரன்கள் எடுத்து அவுட்டாகினர்.

கடைசி வரை களத்தில் போராடிய தினேஷ் கார்த்திக் 44 பந்துகளில் 58 ரன்கள் எடுத்தார். இருப்பினும் 20 ஓவர் முடிவில் 162 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் பஞ்சாப் அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது.

அதிகம் படித்தவை:  கோலி - ஏ பி டிவில்லேர்ஸ் பேட்டிங் திறனை வியந்து பாராட்டிய கூகுள் CEO சுந்தர் பிச்சை.

குஜராத் அணிக்கு எதிராக அனைத்து அணிகளும் அதிக ரன்களை குவிப்பதும், அதற்கு குஜராத் அணியும் பதிலடி கொடுத்து, போராடி வெற்றி அல்லது தோல்வியை பெறுவதே வேலையாக வைத்துள்ளது.

7 போட்டிகளில் விளையாடியுள்ள குஜராத் அணி 2ல் மட்டும் வெற்றி பெற்று 5 தோல்விகளுடன் பின் வரிசையிலிருந்து தொடர்ந்து முதலிடத்தை வகித்து வருகின்றது.