பெங்களூர் அணிக்கு எதிரான லீக் போட்டியில் பஞ்சாப் அணி  19 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றுள்ளது.

ஐ.பி.எல் பத்தாவது சீசனில் இன்றைய லீக் போட்டியில் பெங்களூர் அணியும் பஞ்சாப் அணியும் பலப்பரீட்சை செய்தன.

இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணியின் கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 138 ரன்கள் எடுத்திருந்தது.

இதனையடுத்து 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணிக்கு வழக்கம் போல் அந்த அணியின் முக்கிய வீரர்களான கெய்ல்(0), கோஹ்லி(6), டிவில்லியர்ஸ்(10) என அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினர்.

முண்ணனி வீரர்கள் ஏமாற்றினாலும் மற்றொரு துவக்க வீரரான மந்தீப் சிங் 46 ரன்கள் எடுத்து சற்று அறுதல் அளித்தார், பின் வரிசையில் வந்த வீரர்களில் பவண் நேகி மட்டும் 21 ரன்கள் எடுத்து சற்று கொடுத்தாலும் மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறவே 19 ஓவரின் முடிவில் 119 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தபோது பெங்களூர் அணி அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 19 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது.

போட்டி துவங்குவதற்கு முன் இன்றைய போட்டியில் நாங்கள் தான் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று பெங்களூர் அணியின் நட்சத்திர வீரர் டிவில்லியர்ஸ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.