செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

தலையில் துண்டை போட்ட விஜய்.. ஓஹோ இதுக்கு தான் 75 கோடியா? தளபதியை தொடரும் தலைவலி

தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கியிருக்கும் விஜய் தனது 69ஆவது திரைப்படத்துடன் சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அவரின் இறுதித் திரைப்படத்தை எச்.வினோத் இயக்குகிறார்.

விஜய் – எச்.வினோத் கூட்டணியில் உருவாகும் இந்தப் படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் புதிய போஸ்டர் உடன் வெளியிட்டது படத்தின் தயாரிப்பு குழு. அதில் “The Torch bearer of democracy” என்ற ஆங்கில வாசகம் இடம் பெற்றிருக்கிறது.

இந்த நிலையில், படப்பிடிப்பே இப்போதுதான் தொடங்கியிருக்கும் நிலையில், தளபதி-69 படத்தின் வெளிநாட்டு உரிமம் பெரும் விலைக்கு விற்பனையாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தளபதி-69 பட வெளிநாட்டு உரிமையை கைப்பற்றி உள்ள ஃபார்ஸ் பிலிம்ஸ் நிறுவனம், அதற்காக சுமார் 78 கோடி ரூபாய் கொடுத்துள்ளதாம்.

இதுக்கு தான் 75 கோடி யா?

மேலும் இதை சிங்கில் payment ஆக பெற்றுள்ளது படக்குழு. அதுக்கு காரணம் என்னவென்றால், இந்த புதிய தயாரிப்பு நிறுவனத்திடம் போதுமான அளவு நிதி இல்லையாம். அதனால் பட்ஜெட் குறைக்கு சொல்லி தொடர்ந்து ஹெச்.வினோத்-க்கு மண்டை குடைச்சல் கொடுத்து வருகிறது தயாரிப்பு நிறுவனம்.

மேலும் நிதி இல்லாததால் துபாய்யிலிருந்து கடன் பெறுகிறார்கள் என்றெல்லாம் கூறப்படுகிறது. சூழ்நிலை இப்படி இருக்க, இது விஜய் காதுக்கு வர, அவருக்கு கடுப்பை ஏற்றியுள்ளது. என்னடா கடைசி படத்துல இந்த பிரச்சனையா என்று தலையில் துண்டை போட்டுள்ளார்.

பேசாம பெரிய தயாரிப்பு நிறுவனத்துக்கிட்டயே போயிருக்கலாம் என்று புலம்பி கொண்டும் வருகிறார்கள் ரசிகர்கள்.

- Advertisement -

Trending News