fbpx
Connect with us

“பிஞ்சிலயே பழுத்தவர் ஜீவா, பழுத்தே பிஞ்சானவர் விஜய் சேதுபதி” – பிரபல இயக்குனரின் கருத்து .

News | செய்திகள்

“பிஞ்சிலயே பழுத்தவர் ஜீவா, பழுத்தே பிஞ்சானவர் விஜய் சேதுபதி” – பிரபல இயக்குனரின் கருத்து .

அட ஆமாங்க இயக்குனர் கே. வி. ஆனந்த் தான் இப்படி ஒரு கருத்தை சொல்லியுள்ளார்.

K.V.Anand

ஜீவா, நிக்கி கல்ராணி,  அனைக்கா சோட்டி, ஆர்.ஜே.பாலாஜி மற்றும் பலர்  நடிக்க அறிமுக இயக்குநர் காளீஷ் இயக்கியுள்ள திரைப்படம் ‘கீ’. AAA படத்தினை அடுத்து மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் வெளிவரும் படம் . இந்தப் படத்துக்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.

Kee – AL

விழாவில், ‘கீ’ படக்குழுவினர், தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால், விஜய் சேதுபதி, தயாரிப்பாளர்கள் கே.ராஜன், ஜாக்குவார் தங்கம், மன்னன், ஒளிப்பதிவாளர் ராம்ஜி, இயக்குநர்கள் கே.வி. ஆனந்த், ஆர்.வி. உதயகுமார், மனோபாலா, ஆதிக் ரவிசந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

அந்த விழாவில் கீ’ பட நாயகன் ஜீவா பேசுகையில், “இது, நான் 3  வருடங்களுக்கு முன் கேட்ட கதை. இந்த கதையை,  காளீஷ், பல தயாரிப்பாளர்களுக்குக் கூறினார். அவர்களில் மைக்கேல் ராயப்பன் இந்தக் கதையையும் இயக்குநரின் திறமையையும் நம்பி படத்தை தயாரிக்க முன்வந்தார்.

Jiiva

இது, இன்டர்நெட் உபயோகத்தால் நடக்கும் சாதக பாதகங்களைக் கூறும் படம். சினிமா இன்று முற்றிலும் வியாபாரமாகிவிட்டது. ‘கோ’ போன்ற ஒரு பெரிய படத்தில் நடித்தபிறகு அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யக்கூடிய படம் இன்னும் எனக்கு அமையவில்லை. ஆனால், இந்த ‘கீ’ அப்படியொரு படமாக இருக்கும்” என்றார்.

ko movie

ko

அடுத்து பேசிய இயக்குநர் கே.வி.ஆனந்த்,

” கோ படத்தில் மாநிலத்தின் முதல்வரை தேர்ந்தெடுக்கும் ரோலில்  ஜீவா சின்ன பையன் மாதிரி இருப்பார் என்று என்  உதவி இயக்குநர்கள் கூறினார்கள். ஆனால் கடைசியில் அவர்தான் அந்தக் கதாபாத்திரத்தை நடித்துக் கொடுத்தார்.

kavan

அதேபோல் ‘கவண்’ படத்துக்காக விஜய் சேதுபதியிடம் பேசும்போது, ‘அவர் பேசினால் வாயில் பீடா போட்டுக்கொண்டு பேசுவதுபோல் இருக்கும். அவரெல்லாம் எப்படி டிவி ஆங்கராக நடிக்க முடியும்’ என்று என்னுடைய ஒரு உதவி இயக்குநர் ஒருவர் கேட்டார். ஆனால் விஜய் சேதுபதி  கவண் படத்தில் நடித்தார்.

Kavan-Team

இப்படி இருவருமே என் முதல் சாய்ஸாக இல்லாதவர்கள். ஆனாலும் தங்கள் கதாபாத்திரங்களில் தரமாக நடித்துத் தரக்கூடியவர்கள். நடிப்பில் பிஞ்சிலயே பழுத்த ஆள் ஜீவா, பழுத்தே பிஞ்சானவர் விஜய் சேதுபதி” என்றார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top