Tamil Cinema News | சினிமா செய்திகள்
குட்டி ஸ்டோரி உருவாக இவர் தான் காரணமாம்.. வெளியானது தகவல்
சென்னை: தளபதி விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான குட்டி ஸ்டோரி பாடல் நேற்று மாலை வெளியானது. இப்பாடல் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. விஜய் இந்த படத்தில் ஆசிரியராக நடிப்பது உறுதியாகி உள்ளது.
விஜய்சேதுபதி என்ன ரோல் என்பது மட்டும் தெரிந்தால் படத்தின் கதை இப்படித்தான் இருக்கும் என்று அனுமனித்துவிடலாம். இந்நிலையில் விஜய் பாடலின் வரிகள் காட்சி அமைப்பு இதுவரை இல்லாத வகையில் குழந்தைகளையும் வெகுவாக கவரும் வகையில் கார்டுன் பாணியில் உருவாக்கப்பட்டு இருப்பது பலரையும் வியப்பபில் ஆழ்த்தியது.
இந்த கதை பள்ளி குழந்தைகளுக்கு ரீச் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் விஜய்யே விரும்பி பாடியிருக்கிறார். இந்த பாடலின் வரிகள் ஆங்கிலத்தில் இருந்தாலும் கேட்பதற்கு இனியைமாக இருப்பதுடன் முதல் முறை கேட்கும் போதே அப்படி ஒரு ஈர்ப்பை கொடுத்துள்ளது. பலரும் பலமுறை தொடர்ந்து பார்த்து வருகிறார்கள்.
இந்நிலையில், குட்டி ஸ்டோரிக்கு காரணம் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் உதவி இயக்குநரான லோகி தானாம். மாஸ்டர் ஃபர்ஸ்ட் லுக் குட்டி ஸ்டோரி, இப்படி கார்ட்டூன் அமைப்பில் உருவாக்க மூலக் காரணமாக இருந்திருக்கிறாராம் லோகி.
இனிமேல், இவரிடமும் அப்டேட் கேட்டு தொல்லை பண்ணுங்க, செத்தடா லோகி, என அப்டேட் கிங் ரத்னகுமார் ட்வீட் போட்டுள்ளார். வைரலாகும் லிரிக்ஸ் வரிகளுக்கு வரவேற்பு நெருப்புடா பாடலை பாடி அசத்திய அருண்ராஜா காமராஜ் இப்பாடலை எழுதி இருக்கிறார்.
டிசைன் டிசைன்னா பிராப்ளம் வரும், ஹார்ட் வொர்க்கும் வேணும், ஸ்மார்ட் வொர்க்கும் வேணும், செல்ஃப் மோடிவேஷன் அது நீதானே என அசத்தி இருக்கிறார். இதை ரசிகர்கள் ஷேர் செய்து கொண்டாடி வருகிறார்கள்.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
