Tamil Cinema News | சினிமா செய்திகள்
அட்லீக்கு கொடுத்த கிஸ்.. காதலர் தினத்தை சிறப்பாக கொண்டாடிய பிரியா
விஜய் உடன் தெறி, மெர்சல், பிகில், ஆகிய மூன்று படங்களை எடுத்தவர் அட்லீ. இந்த மூன்று படங்களும் செம்ம சூப்பர் ஹிட். விஜய் இந்த அளவுக்கு எந்த இயக்குனருக்கும் அதிக வாய்ப்புகளை கொடுத்து இல்லை. அட்லியும் விஜய்க்கு நம்பிக்கை அளிக்கும் படங்களை தொடர்ந்து அளித்தருக்கிறார்.
விஜய்யை அண்ணா என்றே எப்போதும் அழைக்கும் அட்லிக்கு விஜய் மீது கொள்ளை பாசம். இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் குட்டி ஸ்டோரி பாடல் காதலர் தினத்தை முன்னிட்டு நேற்று வெளியானது.
இந்த பாடல் ரசிகர்களை தாண்டி சினிமா பிரபலங்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. குட்டி ஸ்டோரி பாடலை அருண்ராஜா காமராஜ் எழுத விஜய் பாடியிருந்தார். இந்நிலையில் இயக்குனர் அட்லி தனது காதல் மனைவியான பிரியாவுடன் காதலர் தினத்தை நேற்று கொண்டாடினார்.
அப்போது அட்லீக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை பிரியா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதோடு ஒரு குட்டிக்கதை பாடலில் இடம் பெற்ற life is very short nanbaa, always be happy என்ற வரிகளையும் பதிவிட்டு காதலர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

atlee-priya
