fbpx
Connect with us

Cinemapettai

குட்டி ஸ்டோரி யூடியூப்பில் செம்ம.. மாஸ்டர் விஜய் வேற லெவல்.. சாதித்த ரசிகர்கள்

vijay-master

Tamil Nadu | தமிழ் நாடு

குட்டி ஸ்டோரி யூடியூப்பில் செம்ம.. மாஸ்டர் விஜய் வேற லெவல்.. சாதித்த ரசிகர்கள்

சென்னை: நேற்று மாலை 5 மணிக்கு வெளியான மாஸ்டர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான குட்டி ஸ்டோரி பாடல், 65 மில்லியன் அதவாது 65 லட்சம் பார்வைகளை பெற்று யூடியூப் டிரெண்டிங்கில் முதல் இடத்தை பிடித்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் படத்தின் மீது ரசிகர்கள் தொடங்கி, விநியோகிஸ்தர்கள், தயாரிப்பாளர்கள், சினிமா உலகினர் என்பதை தாண்டி அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாஸ்டர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குட்டி ஸ்டோரி பாடல் நேற்று மாலை 5 மணிக்கு வெளியானது. அனிருத் இசையில், அருண்ராஜா காமராஜ் வரிகளில் விஜய்யே தன்னம்பிக்கை அளிக்கும் இந்த பாடலை பாடியிருந்தார்.

இந்த பாடல் 20 மணி நேரத்தில் 7.4 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. பிகில் வெறித்தனம் பாடலை மிஞ்சி சாதனை படைத்துள்ளது. பிகில் படத்தில் நடிகர் விஜய் பாடிய நெஞ்சுக்குள்ள குடியிருக்கும் நம்ம சனம் வெறித்தனம் 4 மில்லியன்களை கடந்த நிலையில், குட்டி ஸ்டோரி பாடல் 6.4 மில்லியனை கடந்து சாதித்துள்ளது.

24 மணி நேரத்துக்குள் நிச்சயம் ஒரு கோடி பார்வையை குட்டி ஸ்டோரி கண்டிப்பாக கடக்கும் என தளபதி ரசிகர்கள் சூளுரைத்துள்ளார்கள்.

#KuttiStory ஹாஷ்டேக்கை தொடர்ந்து டிரெண்ட் செய்து வருகின்றனர். 5 லட்சத்துக்கும் மேலான ட்விட்டுகள் அந்த ஹாஷ்டேக்கில் இடம்பெற்று இந்தியளவில் டிரெண்டாகி வருகிறது. குட்டி ஸ்டோரி பாடல் இந்திய யூடியூபில் மட்டுமின்றி, சிங்கப்பூர் யூடியூப் பக்கத்திலும் முதலிடத்தை பிடித்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top